தேர்தல்களுக்குப் பிறகு COVID-19 காரணமாக சென்னைக்கு ஊரடங்கு ஆப்பா?
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சென்னையில் கோவிட் -19 க்கு 8,246 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 6 ம் தேதி தேர்தலுக்குப் பிறகு கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. GCC கமிஷனர் ஜி.பிரகாஷ் புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் மாதத்தில் நகரத்தில் COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமூடி (Masks) அணிவது, சமூக தூரத்தை பராமரிப்பது போன்ற விதிகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையர் கூறினார். தேர்தல்கள் முடிந்ததும் மக்கள் இயக்கம் மீதான கட்டுப்பாடுகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கமிஷனரின் எச்சரிக்கை சென்னையில் COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததன் பின்னணியில் வந்தது.
ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தில் (Tamil Nadu) COVID-19 புதிய 3,581 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,344 சென்னையில் (Chennai) பதிவாகியயுள்ளது. கோவிட் -19 காரணமாக இறந்த 14 பேரில், நான்கு பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், 8,246 பேர் தற்போது நகரத்தில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயம்புத்தூரில் 315 புதிய கோவிட் -19 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, செங்கல்பட்டுவில் இந்த எண்ணிக்கை 297 ஆகும். திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, காஞ்சீபுரம் மற்றும் திருப்பூர் போன்ற மாவட்டங்களும் ஞாயிற்றுக்கிழமை 100 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் -19 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
ALSO READ | சென்னையில் கொரோனா அதிகரிப்பு, தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்
82,187 நபர்களுக்கு சொந்தமான 82,791 மாதிரிகளை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தது. கோவிட் -19 ல் இருந்து மீண்டு 1,813 நபர்களும் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
நாளை (ஏப்ரல் 6 ம் தேதி) ஒரே கட்டத்தில் தமிழகம் தேர்தலுக்கு நடக்க உள்ளது, அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பிரச்சார முறையில் இருந்தனர். முன்னதாக, அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்களில் முகமூடி ஒழுக்கம் குறைவாக இருப்பதால் அதிகரித்து வரும் தொற்றுக்கள் குறித்து மாநில சுகாதார செயலாளர் தனது வருத்ததை தெரிவித்திருந்தார். பொதுக் கூட்டங்களில் பங்கேற்பாளர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருப்பதை உறுதி செய்யுமாறு அவர் அரசியல் தலைவர்களை வலியுறுத்தினார்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR