தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அங்கு 400 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார். அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் (MK Stalin) ஆகும். கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தை பொருத்தவரை தமிழகம் கேட்டதை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. தேவையான தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் பெற மத்திய அரசிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். தற்போதைய நிலைமை சரியானதும் டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழகத்தின் உரிமைகளை கேட்டு பெறுவோம். 


ALSO READ | தமிழகத்தில் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? நாளை முக்கிய ஆலோசனையை மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்


நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பது பற்றி அறிவிக்கப்படும். ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் அனைவரும் கட்டாய் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழக மக்களின் உயிர்காக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வருகிற ஜூன் 3 ஆம் தேதிக்குள் அடுத்தகட்டமாக ரூ.2000 வழங்கப்படும் என்று அவர் கூறினார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR