தமிழகத்தில் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? நாளை முக்கிய ஆலோசனையை மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரது கருத்தை கேட்டு அதற்கேற்ப பல புதிய முடிவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுக்கக்கூடும். தமிழகத்தில் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2021, 02:43 PM IST
  • தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் கொடூரம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
  • நாளை முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஒரு முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.
  • ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இந்த ஆலோசனையில் பேசப்படலாம்.
தமிழகத்தில் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? நாளை முக்கிய ஆலோசனையை மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  title=

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் கொடூரம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மருத்துவ கருவிகள் மற்றும் சேவைகளுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று அளவும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து பீதியை கிளப்புகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மே 24 ஆம் தேதி தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) மருத்துவ நிபுணர்களுடன் ஒரு முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரது கருத்தை கேட்டு அதற்கேற்ப பல புதிய முடிவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுக்கக்கூடும். தமிழகத்தில் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கால்தான் தொற்று எண்ணிக்கையில் பெரும் அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 27,000-க்கு மேலிருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தொடர்ந்து போடப்பட்ட ஊரடங்குக்கு பிறகு 5000-க்கும் கீழ் சென்றுள்ளது.  

ALSO READ: 2,100 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக நியமனம்: தமிழக அரசு

முன்னதாக, தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர கடந்த ஏப்ரல் 20- ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தன. ஆயினும், கொரோனா தொற்றின் எண்ணிக்கையில் எந்த வித மாறுதலும் ஏற்படாத நிலையில், மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் காய்கறி, இறைச்சி, மளிகை, மீன் கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்திருக்கும் என்று கூறப்பட்டது. 

எனினும், பலரும் ஊரடங்கை மதிக்காமல், தேவையின்றி வெளியிடங்களில் சுற்றியதால், கடைகள் திறந்திருக்கும் கால அளவு காலை 10 மணியாக குறைக்கப்பட்டது. இன்னும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், வியாழனன்று தமிழ்நாட்டில் 35,579 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,34,804 ஐ எட்டியுள்ளது. 

நேற்று கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 397 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,131 ஆக உயர்த்தியுள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. நேற்று 25,368 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 14,52,283 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 2,63,390 ஆக உள்ளது.

ALSO READ: கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு: தமிழக அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News