தமிழின் இலக்கியச் செழுமையை உலகறிய செய்யும் வகையில் பொருநை இலக்கியத் திருவிழா தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு நாட்கள் நெல்லை மாநகரில் நடைபெறுகிறது. பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடந்த தொடக்க விழாவை காணொலி காட்சி வழியாக  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகையில்,"தமிழ் சமூகம்  இலக்கிய முதுர்ச்சியும்,  பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். கீழடி, சிவகளை, கொற்கை போன்ற அகழ்வாய்வு வழியாகவும் பல்வேறு முன்னெடுப்பு வழியாகவும் அறிவியல் பூர்வமாக நிறுவப்படும் தொன்மை மிகுந்த நமது பெருமை. 


மேலும் படிக்க | தமிழ் இருக்க இந்தி எதற்கு?... இந்தி திணிப்புக்கு எதிராக திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை


அன்னை மடியில் முதல் நிகழ்வு


இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று அறிவுசார் சமுகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடக்க உள்ளது. தமிழின் இலக்கிய செலுமையை போற்றும் வகையில் பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை போன்ற 5 இலக்கிய திருவிழாக்கள் நடத்தபட உள்ளது.


முதல் நிகழ்வாக அன்னை மடியான நெல்லை பொருநை நகரத்தில் நடத்தபடுகிறது. 'அறிவை விரிவு செய், அகண்டமாக்கு' என பாவேந்தர் சொல்லுக்கு இணங்க தமிழ் மண்ணின் செலுமைகளை உலகுக்கு எடுத்துரைக்க பொருனை இலக்கிய விழா அமையட்டும். இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்" என தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து, விழாவில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில்,"நெல்லை என்றால் தியாக வரலாறு உள்ள பூமி. இந்த மண்ணில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கப்பட்டுள்ளது, பெருமைக்குரியதாகும். 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற விழாவை யாரும் நடத்தியதில்லை, இதற்காக பள்ளிக் கல்வித்துறையை பாராட்டுகிறேன். தமிழகத்தில் அதிக துறை இருக்கும் போது பள்ளிகல்வி துறைக்கு தமிழக முதல்வர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.  


ஸ்டாலின் நிலைத்து நிற்பார்


அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்பதற்கு இந்த விழாவை சான்றாக கொள்ளலாம். கல்வியை கற்றுகொடுக்கும் சிறந்த இடமாக தமிழகம் விளங்குகிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் என 88 சதவீதம் பேர் தமிழகத்தில் திரவிட இனத்தை சார்ந்தவர்கள் வாழ்கின்றனர். திராவிட மாடல் என்பது சித்தாந்தம். 


அதனை தமிழக முதல்வர் கையில் எடுத்துள்ளார். தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி, மக்களைத்தேடி மருத்துவம் என மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது . இந்திய அளவில் 14ஆவது இடத்தில் இருந்த தமிழக தொழில்துறை, தற்போது 3ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.



நம்பர் 1 என்ற நிலைக்கு தமிழகத்தை உயர்த்த முதல்வர் உழைத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கின்ற ஆட்சி நடக்கிறது. வரலாற்றை உருவாக்கும் தலைவர்கள் தான் நிலைத்து இருப்பார்கள் அத்தகைய வரலாற்றை உருவாக்கியவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்" என தெரிவித்தார்


'தமிழ் சாகித்ய அகாடமி விருது'


தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கருணாநிதி குறித்து அண்ணா சொன்ன வார்த்தை எனது தம்பி இருக்கும் இடம்தான். எனக்கு புனித இடம் என குறிப்பிட்ட பாளையங்கோட்டையில் இருந்து இந்த நிகழ்வு தொடங்குவது மகிழ்ச்சி தருகிறது. 


அனைத்து நிகழ்வுக்கும் முத்தாய்ப்பான நிகழ்வு இலக்கிய திருவிழா என்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. மொழியை காக்க மொழிபோரும் எங்களால் நடத்த முடியும் பெருமைபடுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளும் நடத்த முடியும். 


இந்தியாவுக்கே முன்னோடியான திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம். நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும்  காணி மலைக்கிராமங்களிலும் இல்லம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. எந்த ஆட்சியும் இல்லாத வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.


'தமிழ் சாகித்ய அகாடமி விருது' என்ற விருதை தமிழ்நாடு அரசு தனியாக வழங்க வேண்டும் என மலையாள எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் பேசும்போது தெரிவித்தார். இதுகுறித்த கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். 


தமிழின் பெருமையை பரைசாற்றும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள்தொகையில் 6ல் ஒருவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது எங்களது துறைக்கு பெருமை. அரசு பள்ளி என்றால் வறுமையில் இருப்பவர்களுக்கு என்ற நிலையை  மாற்றி அரசு பள்ளி என்றால் பெருமை மிகுந்தது என்ற நிலையை உருவாக்கி வருகிறோம். 


குழந்தைகளுக்கு இலக்கியத்தை கொண்டு செல்லவேண்டும் என்பது நமக்கு கடமையாக உள்ளது. அடிப்படை வாசிப்பை கூட பிற்போக்குவாதிகளின் பேராயுதமாக மாற்ற நினைக்கிறார்கள். முதலமைச்சர் எழுத்தாளர்களுக்கு எழுத்துக்கும் கொடுக்கும்  முக்கியத்துவத்தின் அடையாளமே, கனவு இல்லம் திட்டம். எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள், தமிழ்மொழி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது" என தெரிவித்தார்.
     
இலக்கியவாதிகள் மகிழ்ச்சி


இரண்டு நாள் நடக்கும் பொருநை இலக்கிய விழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம், நேருஜி கலையரங்கம், மேலகோட்டை வாசல், பி.பி.எல் திருமண மண்டபம், நூற்றாண்டு மண்டபம் ஆகிய ஐந்து இடங்களில் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள், மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடக்கிறது.  


இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சாகித்திய அகாடெமி விருதுபெற்ற வண்ணதாசன், கேரள மாநில பிரபல எழுத்தாளர் கல்பட்டா நாராயணன், எழுத்தாளர் பவாசெல்லத்துரை, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் , சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்


பொருநை இலக்கிய விழா அரசு விழாவாக நடப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக  முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதுடன் , தமிழ் சாகித்திய அகாதமி விருது வழங்க வேண்டும் என்றும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்ட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் - திமுக பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ