குற்றவாளிகளை பிடிக்குப்போகும் போது பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்துக்கொள்ளலாம் எனகோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை மாவட்டம், சூலூர் செட்டிபாளையத்தில் ஒரு டன் அளவிலான குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்காக கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் நேரடியாக செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை மாவட்டத்தில் இதுவரை 101 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. 127 பேர் கஞ்சா வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 131 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | கஞ்சாவுக்கு அடிமையான இளம் பெண் மரணம் : நடந்தது என்ன.?


இதுவரை குட்கா போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 154 வழக்குகள் பதியப்பட்டு 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2 டன்னுக்கும் மேலாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தி அடிமை ஆகாமல் இருப்பதற்காக தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு கூறியிருப்பது போல கோவை மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வைத்திருக்கும் சொத்துக்கள் முடக்கப்படும். 



பொதுவாக குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது தற்காப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்தலாம். இது போன்ற வழிமுறைகள்  காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்புக்காக துப்பாகியை பயன்படுத்தலாம். கோவையில் காவல் ஆய்வாளர் ஒருவர் மீது லாரியை மோத வைத்து விபத்து ஏற்படுத்த சில குற்றவாளிகள் துணிந்தனர். அதனால் ஆயுதங்களை தற்காப்புக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | அரசு மருத்துவமனை ஆப்பரேஷன் தியேட்டரில் அழுகி கிடந்த பெண் சடலம்.. நடந்தது என்ன.?


கோவை மாவட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்காக சிவப்பு,ஆரஞ்சு, பச்சை என மாவட்டம் முழுவதும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1144 இடங்கள் இதுவரை கண்டறியப்பட்டு 700 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வடமாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுப்பதற்கு ரயில்வே போலீசாருடன் இணைந்து தமிழக காவல்துறையும் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.


தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR