பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என பன்முக தன்மை கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு,ஹிந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர் 2002-ம் ஆண்டு "நந்தனம்" என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதையடுத்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமானவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


பொதுவாக முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழகம்-கேரளம் இடையே பிரச்சினை நிலவுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அணையின் நீர்மட்டத்தினை அதிகரிக்க கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   தற்போது அப்பகுதியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக  முல்லை பெரியாறு அணை பகுதியில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.  இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழமையான இந்த அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை. அரசியலையும், பொருளாதாரத்தையும் ஒதுக்கிவைத்து சரியானதை செய்வதற்கான நேரம் தான் இது'' என்று கூறியுள்ளார்.


 



இவரின் கருத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த எதிர்ப்பின் விளைவாக தேனியில் பிருத்விராஜின் உருவபொம்மையை எரித்துள்ளனர். அதுபமட்டுமல்லாது பிருத்விராஜை தமிழ் படங்களில் நடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அரசியல் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.  மேலும் இந்த பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் கூறுகையில், ‘‘பிருத்விராஜ் தமிழ் படங்களில் நடித்து தமிழ்நாட்டில் சம்பளம் வாங்கிவிட்டு கேரளாவில் உட்கார்ந்து முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது, என்று கருத்து கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை தமிழகத்தில் உள்ள நடிகர்கள் கண்டிக்க வேண்டும்” என்றார்.  அரசியல் தரப்பின் எதிர்ப்பினால் சில தயாரிப்பாளர்கள் நடிகர் பிருத்விராஜை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய யோசிப்பதாகவும் திரை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ Aryan Khan Bail: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்தது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR