சென்னையில் கொரோனா அதிகரிப்பு, தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்
சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.
சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:
சென்னையில் (Chennai) கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக்கொள்வது அவசியம். கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்கவிளைவுகள் எதுவும் வராது. சென்னையில் சராசரியாக 350க்கு மேல் கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் தற்போது தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ALSO READ | தீவிரமடையும் கொரோனா தொற்று, 24 மணி நேரத்தில் 172 பேர் மரணம்!
சென்னையில் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமாக உள்ளது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் (Mask) அணிய வேண்டும். மேலும் ஊரடங்கு (Lockdown) தொடர்பாக கூறிய அவர், லாக்டவுன் போடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என விளக்கமளித்தார்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR