சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் பரவலும் மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு புதிதாக தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் 11,08,087 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்  அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.  


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை தினசரி அடிப்படையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 12, 2021) 6711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.  


Also Read | குரானின் வசனங்கள் சட்டத்தை மீறுகிறதா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?


கடந்த 24 மணி நேரத்தில் 6711  பேருக்கு COVID19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2339 பேர் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர் என்றும், 19 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  


இன்று புதிதாக கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக:


 
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  (Edappadi K. Palaniswami) தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் ந்டைபெற்றது.


இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அடுத்தகட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.


ALSO READ | கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR