கொரோனாவின் தாக்கம் சற்று தற்போது குறைந்திருந்தாலும் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாமென்றும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமெனவும் மருத்துவர்கள் தரப்பிலும், அரசு தரப்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி பெரும்பாலானோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இருப்பினும் எந்த வயதினருக்கு எந்த தடுப்பூசி போடலாம் என்பது குறித்த குழப்பம் பலருக்கு இருந்தது.



இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை எந்த வயதினருக்கு எந்த தடுப்பூசி போடலாம் என்பது குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் விவரம் பின்வருமாறு:


12 - 17 வயதினர்:


தனியார் மருத்துவமனைகளில் "கோவோவேக்ஸ்' தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | 100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் ; கைதேர்ந்த கொள்ளையனின் பகீர் பின்னணி..!


அதேபோல், அவர்கள் கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த விரும்பினால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ளலாம்.


5 - 17 வயதினர்:


கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்றால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.


18 வயதுக்கு மேற்பட்டோர்:


கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியும், ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளலாம்.


18-59 வயதுக்கு உட்பட்டோர்:


பூஸ்டர் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்படாது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் 18 - 59 வயதுக்குட்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.


60 வயதுக்கு மேற்பட்டோர்:


கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | ‘எந்த போலீஸும் எங்களப் பிடிக்க முடியாது’ - முதலாளிக்கு வாட்ஸ் அப் பண்ணிய வடமாநில திருடர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ச