மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லத்தை’ அரசு நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக அரசு ஈடுபட்டது. இதற்காக வேதா இல்லத்தை கையகப்படுத்தும் விதமாக, அந்த இடத்திற்கான மதிப்பீட்டு தொகையை நிர்ணயித்து 68 கோடி ரூபாயை தமிழக அரசு சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்திருந்தது. இதுதொடர்பாக அரசாணையும் வெளியிட்டதால், இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு ஒன்றை அளித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மீண்டும் 1 மாத காலம் ஒத்திவைக்கப்பட்ட கொடநாடு வழக்கு -காரணம் என்ன?


ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரையும் இரண்டாம் நிலை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவித்தது. அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் சொத்துக்களில் சிலவற்றை ஒதுக்கி, அவர் பெயரில் பொதுச் சேவைக்காக அறக்கட்டளை ஒன்றை தீபாவும், தீபக்கும் அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்றும், கையகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


மேலும் படிக்க | தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்கு சட்ட வாரிசுகள்: நீதிமன்ற அறிவிப்பு


இந்த வழக்கு முடிந்து, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தற்போது ஆட்சி புரிந்து வருகிறது. வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துவிட்டதால் அந்த இடத்திற்காக டெபாசிட் செய்த 68 கோடியை திரும்ப பெறும் நடவடிக்கையில் தற்போதைய திமுக அரசு இறங்கியது. அதன்படி, சென்னை பெருநகர 6-வது உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், வேதா இல்லத்திற்காக தமிழக அரசு செலுத்திய தொகையை திரும்ப பெறவும், அதனை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடவும் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, அந்த தொகையை திருப்பி செலுத்த உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற பதிவாளர் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த தொகை, வட்டியுடன் சேர்த்து மொத்தம் 70 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 713 ரூபாயாக சென்னை வருவாய் கோட்டாட்சியரின் கணக்குக்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR