IIT சென்னையில் எகிறும் தொற்று பாதிப்பு; மேலும் 32 பேருக்கு கொரோனா
திங்கள்கிழமை மாணவர்களிடமிருந்து மொத்தம் 1,121 மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.
சென்னை: இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (ஐஐடி-சென்னை) வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை மேலும் 32 புதிய கோவிட்-19 தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதை அடுத்து, ஐஐடி சென்னை கல்லூரி மாணவர்களில் சிகிச்சையில் உள்ள மொத்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக திங்கள்கிழமை, ஐஐடி-மெட்ராஸ் மாணவர்கள் 18 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நேற்றைய மொத்த எண்ணிக்கை 78 ஆக இருந்தது. நேற்று மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 1,121 மாதிரிகளின் முடிவுகள் செவ்வாய்கிழமை வெளியாகும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை, தமிழகத்தில் 55 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகினன. இதனால் மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 34,53,607 ஆக உள்ளது. இறப்பு எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இன்று எந்த இறப்பும் பதிவாகவில்லை என்று சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று தொற்று உறுதியான 55 பேரில் அஸ்ஸாமில் இருந்து சாலை வழியாக திரும்பிய நபர் ஒருவரும் அடங்குவர். RT-PCR மூலம் சோதனை செய்தவர்களில் 33 ஆண்கள் மற்றும் 22 பெண்களுக்கு தொற்று உறுதியானது
தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் டாக்டர். ஜே ராதாகிருஷ்ணன், சென்னை மண்டல மருத்துவ அதிகாரி டாக்டர் ஆல்பி ஆகியோருடன் கல்லூரிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
முன்னதாக, நேற்று முன் தினம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR