COVID Update: இன்று தமிழகத்தில் கொரோனாவால் 364 பேர் உயிரிழப்பு, 33,059 பேர் பாதிப்பு
செவ்வாயன்று தமிழ்நாட்டில் 33,059 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,64,350 ஐ எட்டியுள்ளது.
சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவில் பெரிதாக வீழ்ச்சியைக் காண முடியவில்லை.
செவ்வாயன்று தமிழ்நாட்டில் 33,059 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,64,350 ஐ எட்டியுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,31,596 ஆக உள்ளது என மாநில சுகாதார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 364 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,369 ஆக உயர்த்தியுள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இன்று 21,362 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்.
இதனுடன் தமிழகத்தில் தொற்றிலிருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,03,052 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் (Chennai) மட்டும் இன்று ஒரே நாளில் 6,016 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைத் தவிர, காஞ்சிபுரத்தில் 761 பேர், திருவாரூரில் 805, தேனியில் 667, நாகையில் 652, சேலத்தில் 650, கடலூரில் 591, நெல்லையில் 589, ராணிப்பேட்டையில் 539, வேலூரில் 520, விருதுநகரில் 476, தஞ்சையில் 475, திருவண்ணாமைலையில் 456, நாமக்கல்லில் 384, தென்காசியில் 346, நீலகிரியில் 340, திண்டுக்கல்லில் 323, கரூரில் 313, தருமபுரியில் 295, கள்ளக்குறிச்சியில் 291, பெரம்பலூரில் 243, விழுப்புரத்தில் 239, தூத்துக்குடியில் 1,890, திருச்சியில் 1271, மதுரையில் 1,011, கன்னியாகுமரியில் 863, திருப்பத்தூரில் 806, கோவையில் 3,071, செங்கல்பட்டில் 2,299, திருவள்ளூரில் 1,890, ஈரோட்டில் 1,568, திருப்பூரில் 1,561 பெர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவைப் (India) பொறுத்தவரையில், கடந்த 5 நாட்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. 26 நாட்களுக்கு பிறகு நேற்றைய ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ₹ 45 கோடி செலவில் சுமார் 15 லட்சம் குப்பிகள் பெறப்பட்டுள்ளதாக சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார் தெரிவித்தார். ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் சித்த வைத்தியம் அளிக்கப்படும் இடங்களில் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். கோயம்புத்தூருக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை தத்தெடுத்த ஈஷா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR