சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றின் அளவில் எழுச்சியைக் கண்டு வருகிறோம்.
இதன் காரணமாக பல மருத்துவ சிகிச்சைப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி, மருத்துவ ஆக்சிஜன், கொரோனா மருந்துகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி தமிழகத்திலேயே தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியாவில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி (Vaccination) செயல்முறை துவங்கி விட்டது. எனினும், தடுப்பூசிகளில் உள்ள தட்டுப்பாடு காரணமாக, தமிழகத்தில் இன்னும் இந்த வயதினருக்கு தடுப்பூசிகள் போட முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கும் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கு தடுப்பூசிகள் தேவைப்படுவதால், தட்டுப்பாடு மிக அதிகமாக உள்ளது. மக்கள் தடுப்பூசி மையங்களுக்கு வந்து, தடுப்பூசி இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்புவதை நாம் கண்டு வருகிறேம்.
தடுப்பூசிகளின் அளவை அதிகரிக்க, சென்ற வாரம், தடுப்பூசிகளுக்கான உலகளாவிய டெண்டர்களை முதல்வர் ஸ்டாலின் கோரியிருந்தார். இதற்காக, 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் ஜூன் 5-ம் தேதி காலை 11 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: சென்னையில் இ-பதிவு இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தம்!
அது ஒருபுறம் இருக்க, தற்போது அடுத்த கட்டமாக, தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கபடும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் மட்டுமல்லாமல், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியையும் தமிழ்நாட்டிலேயே தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவை மட்டுமல்லாமல், கொரோனா (Coronavirus) சார்ந்த அனைத்து வித மருத்துவ கருவிகள் மற்றும் சேவைகளையும் தமிழகத்திலேயே உருவாக்குவது குறித்தும் நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவ சிகிச்சைக்கான உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் போன்றவற்றையும் தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய அரசையும், வெளிநாடுகளையும் நாடி இருப்பதால், இந்த அத்தியாவசிய தேவைகளுக்கான தடுப்பாடு அதிகரிக்கின்றது. கொரோனா சிகிச்சை மற்றும் தற்காப்பு செயல்முறைகளில் முக்கிய பங்களிக்கும் தடுப்பூசிகள், மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், கொரோனா மருந்துகள் ஆகியவற்றை மாநிலத்திலேயே உற்பத்தி செய்தால், அது தமிழகத்தில் கொரோனாவை தடுக்க வெகுவாக உதவும் என்பதை மறுப்பதற்கில்லை.
ALSO READ: மக்கள் கோரிக்கையை ஏற்று இ-பதிவில் மீண்டும் சேர்க்கப்பட்டது திருமண பிரிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR