Kachchatheevu Issue : மனைவியோடு வாழாத மோடி, மக்களை மட்டும் எப்படி குடும்பமாக நினைப்பார்? முத்தரசன் காட்டம்
CPI Mutharasan Ask PM Modi on Kachchatheevu Issue : கச்சத்தீவு குறித்து இப்போது பேசும் பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளாக யாருக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தார்? என ஒசூர் அருகே தேர்தல் பரப்புரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
CPI Mutharasan Ask PM Modi on Kachchatheevu Issue : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தளி எம்எல்ஏ இராமச்சந்திரன் அவர்களுடன் பேரணியாக வந்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இப்போது கட்சத்தீவு குறித்து பேசும் நரேந்திர மோடி 10 ஆண்டுகளாக யாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார் என கடுமையாக விமர்சித்தார்.
மேலும் படிக்க - பாஜகவை அதிமுக விமர்சிக்காது... காரணத்தை ஓபனாக சொன்ன எடப்பாடி பழனிசாமி
கச்சத்தீவு விவகாரம் இப்போது ஏன்?
தொடர்ந்து பேசிய முத்தரசன், தேர்தல் நெருங்க நெருங்க மோடிக்கு ஜொரம் அதிகமாகி உள்ளது, 400 தொகுதிகளில் வெல்வோம் என்றவர் தற்போது 300, 200, 180 தொகுதிகளிலாவது வெற்றி பெறுவோமா? என எண்ணத் தொடங்கிவிட்டார். அவருடைய கணிப்பின்படியே தொகுதிகளின் எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது என்றும் முத்தரசன் கூறியுள்ளார். மேலும், தேர்தல் வந்துவிட்டதால், வேலை வாய்ப்பு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்திருப்பதால் அவற்றை திசை திருப்ப மோடி முயற்சி செய்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மனைவியுடன் வாழாதவர் மோடி
1974ல் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது, அதை மீட்க ப்பட வேண்டுமென்பது இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்த முத்தரசன், 10 ஆண்டுகாலத்தில் இது தவறு என பிரதமர் மோடி கருதி இருந்தால், சட்டபூர்வமாக மீட்டிருக்கலாமே என கேட்டுள்ளார். 10 ஆண்டுகளாக மோடி யாருக்கே பேன் பார்த்தார்கள் என சொல்ல வேண்டும்,10 ஆண்டுகாலத்தில் எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை என முத்தரசன் குற்றம்சாட்டினார். மனைவியுடன் வாழ முடியாத, வாழ தெரியாதவன் மோடி, மனைவியுடன் வாழாதவர் மக்களுடன் குடும்பம் எனக்கூறி எப்படி வாழ முடியும் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு தோல்வி பயம்
கடந்த தேர்தல்களில் இந்திய கூட்டணி பிரிந்து நின்றதால் மோடி பிரதமரானார், பெரும்பாலான மாநிலங்களில் இந்திய கூட்டணி உறுதியாகி தேர்தலை சந்திக்கிறது என தெரிவித்த முத்தரசன், பாஜக - பாமக நள்ளிரவு கூட்டணி, அதிமுக கூட்டணி கள்ளக்கூட்டணி என விமர்சித்தார். இவர்கள் ஒன்றாக இருந்தபோதே 39 தொகுதிகளை கைப்பற்றினோம், இப்போதும் முன்பை விட அதிகஅளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க - கோவையில் மோதிக்கொள்ளும் பாஜக - அதிமுக..! தனி ரூட் எடுத்த திமுக!நிலவரம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ