புரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் (Cyclone Burevi), பாம்பனுக்கு 190 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. மன்னாருக்கு 40 கி.மீ தொலைவிலும், பாம்பனுக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 120 கி.மீ. தொலைவிலும் புரெவிப் புயல் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புரெவிப் புயலின் தாக்கத்தால் மன்னார் கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.
ALSO READ | Cyclone Burevi: தமிழகத்தை நெருங்கும் புரெவி புயலால் பலத்த காற்று
வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் தாக்கத்தால் தென் தமிழகத்தில் பலத்த காற்று வீசுகிறது, கனமழையும் பெய்கிறது. பாம்பனை (Pamban) மையம் கொண்டு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் கணிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது பலத்த காற்று வீசுகிறது. இன்று பிற்பகல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதன் தாக்கம் தெரியும் என்றும் படிப்படியாக இது கன்னியாகுமரி (Kanyakumari) மாவட்டத்தை நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் கூறுகிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் (Karaikal) இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை என்று காரைக்கால் கலெக்டர் அர்ஜூன் தர்மா அறிவித்துள்ளார்.
ALSO READ | பாம்பனுக்கு அருகே புரெவி புயல்: முழு மூச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இதற்கிடையில் தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாம்பனை நெருங்கி வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் புரெவி புயல் கரையை கடந்த பின்பு தெரியவரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியுள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR