பாம்பனுக்கு அருகே புரெவி புயல்: முழு மூச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு புரெவி புயலுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.

Last Updated : Dec 2, 2020, 12:38 PM IST
  • புரெவி புயல் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி வருகிறது.
  • உச்ச எச்சரிக்கை நிலையில் NDRF குழுக்கள்.
  • தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலான மழை.
பாம்பனுக்கு அருகே புரெவி புயல்: முழு மூச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  title=

சென்னை: புரெவி சூறாவளி டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாட்டைத் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சூறாவளி எச்சரிக்கை பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது ஒரே வாரத்தில் தமிழகத்தைத் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ள இரண்டாவது சூறாவளி ஆகும். கடந்த வாரம், மிகவும் கடுமையான சூறாவளி புயலான நிவார் தமிழகம் மற்றும் புதுச்சேரியை தாக்கியது.

புரெவி புயல் (Cyclone Burevi) முதலில் டிசம்பர் 2 ம் தேதி இலங்கையையும், பின்னர் டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாட்டையும் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை புரெவி சூறாவளி புயலின் காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாக IMD-யின் சூறாவளி எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2 மாலை அல்லது இரவில் இது ஒரு சூறாவளி புயலாக திரிகோணமலைக்கு அருகில் இலங்கை (Sri Lanka) கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த சுறாவளி கரையை கடக்கும்போது மணிக்கு 75-85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அது 95 கிமீ வேகத்தையும் எட்டக்கூடும் என்றும் IMD-யின் சூறாவளி எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி காலை மன்னார் வளைகுடா மற்றும் அருகிலுள்ள பகுதிக்குள் வெளிவந்து, அதன் பின்னர் இந்த சூறாவளிப் புயல் கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலையில் கன்யாகுமரி மற்றும் பாம்பன் இடையே மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு தமிழ்நாடு கடற்கரையை கடக்கும் என்று வானிலை எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு புரெவி புயலுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. நிவர் புயலின் போதும், NDRF குழுக்களால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன என்பதை தமிழகம் கண்கூடாகக் கண்டது.

இதற்கிடையில், கடற்கரை மாவட்டமான தூத்துக்குடியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் (NDRF) இரண்டு அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு NDRF குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

No description available.

புரெவி நிவரைப் போல தீவிரமாக இருக்க வாய்ப்பில்லை என்று IMD இயக்குநர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா கூறினார்.

ALSO READ: புரெவி புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்

டிசம்பர் 2 முதல், கன்னியாகுமரி பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு தமிழக கடற்கரைகளில் 45-55 கி.மீ வேகத்திலும் 65 கி.மீ வேகத்திலும் காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் டிசம்பர் 2 ம் தேதி பலத்த காற்று வீசக்கூடும்.

தமிழகத்தின் (Tamil Nadu) சில மாவட்டங்களில் பலத்த மழையையும் வடக்கு தமிழ்நாட்டின் பிற கடலோர மாவட்டங்களில் மிதமான மழையையும் எதிர்பார்க்கலாம். கூடுதலாக, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுரை, கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 30 முதல் 22 டிகிரிக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: புயலாக வலுப்பெறும் 'புரெவி'... தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News