விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - கனிமொழி எம்பி நம்பிக்கை!
ஒன்றியத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி கூறி உள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கனிமொழி எம்பி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம் பட்டியில் தொடங்கி திட்டங்குளம், விஜயாபுரி கரிசல்குளம், பாண்டவர்மங்கலம், கோவில்பட்டி நகரப் பகுதிகள், இனாம் மணியாச்சி மற்றும் நாலாட்டின்புதூரில் வாக்களித்த வாக்காளர்களுக்கு கனிமொழி எம்பி நன்றி தெரிவித்து பேசுகையில், மகளிர் உரிமை தொகை விடுபட்ட மகளிருக்கு பரிசீலனை செய்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். விரைவில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கும். வேலை வாய்ப்பு, குடிநீர் பிரச்சினை உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும், வேலை நாட்கள் அதிகரிக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தோம்.
மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா?
ஆனால் ஒன்றியத்தில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி வந்துவிட்டது. ஆகையால் வாக்குறுதி நிறைவேற்ற முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 100 நாள் வேலை செய்ததற்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருவதால், சரியாக வேலையும், கொடுக்க முடியவில்லை ஊதியமும் கொடுக்க முடியவில்லை. ஒன்றியத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார். நாலாட்டின்புதூரில் கனிமொழி எம்பி பேசிக்கொண்டு இருந்த போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால் பேச்சினை நிறுத்திய கனிமொழி எம்பி,, ஆம்புலன்ஸ்க்கு வழி விடுமாறு கேட்டுக் கொண்டார். உடனடியாக கூட்டத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ்சில் இருந்தவர் கையொடுத்து கனிமொழி எம்பி பார்த்து கும்பிட்டுவாறு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை
இந்தியா முழுவதும் பத்து ரூபாய்க்கு சைனா பிளாஸ்டிக் லைட்டர்கள் அமோக விற்பனை தீப்பெட்டி தொழில் பாதிப்பு சிகரெட் லைட்டரை தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரதான தொழிலாக தீப்பெட்டி தொழிலில் நடைபெற்று வருகிறது. பத்து ரூபாய்க்கு சைனா பிளாஸ்டிக் லைட்டர்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதால் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்தனர். அப்போது அவரிடம் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தி மற்றும் விற்பனையை பாதிக்கும் சீன லைட்டர்களை தடை செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்து வேண்டிக் கொள்வதற்கு ஆவணை செய்ய வேண்டும். மேலும் மத்திய தொழில் துறை மந்திரியையும் சந்திக்க ஏற்பாடு செய்து இந்தியாவில் கள்ளச் சந்தையில் சீன சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் படிக்க | பேரனை கொன்று நாடகமாடிய தாத்தா கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ