தேனி பெரியகுளம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வளர்மதி , எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஏதோ எம்ஜிஆரின் வப்பாட்டிக்கு பிறந்தது போல், எம்ஜிஆரின் வாரிசு என்கிறார் பன்னீர் செல்வம். ஜெயலலிதாவுக்கு சிசேரியனில் பிறந்த குழந்தை மாதிரி, அம்மாவின் வாரிசு என்கிறார். எம்ஜிஆரை பற்றி பேசுவதற்கு அம்மாவை பற்றி பேசுவதற்கு ஓ. பன்னீர்செல்வத்திற்கும்  டிடிவி தினகரனுக்கு என்ன அருகதை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிமுக கூட்டணி அவசியமில்லை, தனித்தே சமக களம் காண தயார் - சரத்குமார்


ஒரு விபச்சாரி, நான் தான் குலப்பெண். கணவரை வைத்து வாழ்கிறேன் என்று சொன்னால் எவ்வளவு கேவலமோ பெரிய கேவலம் இங்கே ஓ பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் கூட்டம் போட பேனர் வைத்திருப்பது. இது 1972 இல் இருந்து கட்சியின் தொண்டர்களாக இருந்தால் எங்களைப் போன்றவர்களுக்கு அவமானம். நான் அம்மாவின் தம்பி அம்மாவின் மகன் என்று சொல்கிற ஓ பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரை எதிர்த்து ஜானகி அணியில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு ஆதரவாக சீஃப் ஏஜெண்டாக இருந்தாரா இல்லையா? ஜெயலலிதாவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாரா இல்லையா? இப்படிப்பட்ட இந்த மகாத்மா காந்தி சொல்கிறார் நாங்கள் எல்லாம் அம்மாவின் வாரிசு என்று. 


தெய்வம் என்ற ஒன்று இருந்தால் டிடிவி தினகரன் குடும்பத்தை நாசமாக போக வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த வீட்டுக்கு ரெண்டகம் செய்தவன் எவனும் உருப்பட்டதே இல்லை. அதிமுக கட்சி,  அம்மா பேரைச் சொல்லி கொள்ளையடித்த பணத்தை அந்த கட்சி அழிவுக்காகவே பயன்படுத்தும் இவர்களை  போகும் வழியிலேயே கடவுள் தண்டிப்பார். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.


மேலும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி இன்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தின் போது அதிமுக கட்சி கொடி, இரட்டை இலை சின்னம் உள்ளிடவற்றை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று கூறி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக சார்பாக மனு அளிக்கபட்டது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய கோரி ஆகஸ்ட் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என கடந்த சில தினங்களுக்கு முன் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். அதன் படி ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி  தரப்பினர் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் ஓபிஎஸ் அணி கொள்கை பரப்பு செயலாளர்கள் புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


அப்போது அவர்கள் அதிமுக கட்சி கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த கூடாது என இபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ள நிலையில் அதிமுக கட்சி கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று கூறி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.  அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன், குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திராமு மற்றும் முன்னாள் எம்.பி ஆர்ஜூனன் ஆகியோர் தலைமையில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகாவினர் எஸ்.பி பிரபாகரிடம் மனுவை அளித்தனர். இந்திய தேர்தல் ஆணையம் இபிஎஸ்-யை அதிமுகவின் பொது செயலாளராக ஏற்றுகொண்டுள்ளதால் கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்டுத்த கூடாது என்பது அவர்களது புகார் ஆகும்.


மேலும் படிக்க | அண்ணாமலை டீமில் இருந்து விழுந்த அடுத்த விக்கெட் - மவுனம் கலைத்த திருச்சி சூர்யா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ