மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது, பலம் மிக்க எதிர்க்கட்சியாக தேமுதிகவை வளர்த்தெடுத்தார் விஜயகாந்த். அதன் பின்னர் கொஞ்ச நாட்களில் அரசியலில் சுறுசுறுப்புடன் இயங்கி வந்த விஜயகாந்த், கடந்த மூன்று ஆண்டு காலம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கினார் விஜயகாந்த். தேமுதிக கட்சியை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கவனித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ் இனத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை: விஜயகாந்த் அறிக்கை


ஆனால், அறிக்கைகள், அறிவிப்புகள், கண்டங்கள் உள்ளிட்டவைகள் மட்டும் கேப்டன் விஜயகாந்த் பெயரில் வந்துகொண்டிருந்தன. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலம் வீட்டில் இருந்தபடியே சிகிச்சையில் உள்ள விஜயகாந்த், அதையடுத்து அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை மேற்கொண்டார். ஆனாலும், அவரது உடல்நிலையில் எந்தவித மாற்றமும் இதுவரை இல்லாத சூழலே இருந்து வருகிறது. 


இதனிடையே, கடந்த ஒரு வார காலமாக விஜயகாந்துக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மியாட் மருத்துவமனையை பொறுத்தவரை விஜயகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை என்பதால், அவரது உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில் தேமுதிக சார்பில் கடந்த வாரம் அறிக்கை ஒன்றும் வெளியானது. அதில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், தற்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகளவு கூடியிருப்பதால் விஜயகாந்தின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தவிர்க்க முடியாத காரணத்தால் விஜயகாந்தின் வலது கால்களில் இருந்த 3 விரல்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 


தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றிய தகவலை அடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தொண்டர்கள் குவிந்தனர். தொடர்ந்து பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் விஜயகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். தேமுதிக கட்சி மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி: விஜயகாந்த் வேதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR