தமிழக மக்களின் ஆதரவை பெற்றுள்ளது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறும் தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.  குடியரசு தலைவர் உரையில் என்ன சொல்லப்பட்டிருந்ததோ அதே கருத்துக்கள் அடங்கிய ஒன்றாகத்தான் ஒன்றிய அரசின் பட்ஜெட் உறையும் அமைந்திருக்கிறது. எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்க கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை ஒரு வெற்று அறிக்கை இந்த பட்ஜெட் அறிக்கை.  இந்த பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்க இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் ஏதேனும் புதிய அறிவிப்புகள் செய்வார்கள் ஏதேனும் திட்டங்களை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்! மத்திய அரசை சாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!


அனைவருமே ஏமாற்றக் கூடிய வகையில் பாஜகவினரே அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் ஒன்றும் இல்லாத ஒரு பட்ஜெட் உரையாக இருக்கிறது. பாஜக தடுமாறி போய் இருக்கிறது தேர்தலை சந்திப்பதில் அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருக்கிறது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து திமுக குழு பாலு தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் விடுதலை சிறுத்தைகளும் அந்த பேச்சு வார்த்தையில் பங்கு பெறும் 10க்கும் மேற்பட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு கட்டுக்கோப்பான கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது. 


கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது. பாஜக அதிமுக கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்பதால் தான் இடையிலேயே சிதறிப் போய்விட்டது. அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் பாஜக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது வழக்கம் போல பாட்டாளி மக்கள் கட்சி தன்னை தனித்து அடையாளப்படுத்திக் கொண்டு எந்த கூட்டணியில் சேரப் போகிறோம் என்பதை ஒரு சூசகமாக வைத்துள்ளார்கள். திமுக கூட்டணி வலுவாக உள்ளது தமிழக மக்களின் ஆதரவை பெற்று 40க்கு 40 வெற்றி பெறும்.


காங்கிரஸ் தொகுதி பங்கீடு


ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மோடியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் என்பதோடு, தமிழகத்தில் பாஜக போட்டியிடும் டெபாசிட் போகும் என்பதைவிட நோட்டாவை விட கேவலமான வாக்குகளை பாஜக வேட்பாளர்கள் பெறுவார்கள் என கூறினார். 


மத்திய நிதி நிலை அறிக்கை என்பது நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதிக்கு போய் முட்டை அடிக்கும் முன்பு சமர்பிக்கும் கடைசி பட்ஜெட் என  நினைப்பதாக கூறினார். தமிழகத்தில் பாஜக - அதிமுக தனித்தனி நின்றாலும் ஒன்றாக சேர்ந்து நின்றாலும் சரி இருவரும் சுடுகாட்டிற்கு தான் போவார்கள், இரண்டு கட்சியும் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தான் சந்திப்பார்கள் என கூறினார்.  தமிழகத்தில் எல்லோரையும் விரும்புவர்கள் மொழி,மதம் வேறுபாடுகள் இன்றி மக்கள் இருப்பதால்,மதத்தால் பிரித்து ஆள நினைக்கும் பாஜகவிற்கு மிகப்பெரிய தோல்வியை தருவார்கள். மோடிக்கும் கொத்தடிமைகளாக இருக்கும் பாஜகவினருக்கு பெருத்த அடியாக இந்த தேர்தல்  இருக்கும் என கூறினார். இந்தியா கூட்டணி சுறுசுறுப்பாக இயங்குகிறது என்று கூறினார்.


மேலும் படிக்க | Health Sector: சுகாதாரத்துறைக்கு பட்ஜெட்டில் இவ்வளவு சலுகைகளா? குஷியில் ஆஷா பணியாளர்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ