இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெறுக்கடி காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலாறு காணாத இந்த விலை ஏற்றத்தால் இலங்கை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் இலங்கை பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல், போராட்டம் என வன்முறைகளிலும் ஈடுபடத்தொடங்கினர்.


இலங்கை அரசும் இந்த நெறுக்கடியை சமாளிக்க இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளிடம் நிதி உதவி பெற்றுள்ளது. ஆனாலும் பொருளாதார நெறுக்கடியை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அரசு திண்டாடி வருகின்றது.


இதையடுத்து தமிழகம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அரிசி, பருப்பு, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி பெற்றார்.


பின்னர், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. 


பின்னர் இலங்கைக்காக உதவும் நோக்கில் திமுக, நாம் தமிழர் கட்சி தங்களது வங்கி கணக்கு விவரங்களை வெளியிட்டு நிதி திரட்டும் பணியில் இறங்கினர்.


மேலும் படிக்க | ஆளுநர் தேநீர் விருந்து... ஆளுங்கட்சி புறக்கணிப்பு - காரணம் என்ன?


மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 


மேலும் இலங்கை மக்களுக்கு உதவ திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 


அதைத்தொடர்ந்து சட்டசபையில் பிற கட்சிகளும் தங்களது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு உதவ நிவாரண நிதியாக அளிக்க முன்வந்தன.


இதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு இலங்கை மக்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


இந்த நிலையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக சார்பில் வழங்கப்படும் ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை வழங்கினார். 


மேலும் படிக்க | தமிழகத்திலும் குஜராத் போல மாநில அரசே துணைவேந்தரை நியமிக்கலாமே கேள்வி எழுப்பும் முக ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR