தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது தவறு செய்தவர்களை பிடித்துக் கொடுத்த முன்னாள் அமைச்சர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குற்றவாளிகளை விட்டுவிட்டு குற்றத்தை கண்டுபிடித்துள்ளவர் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


 தமிழக முன்னாள் முதலமைச்சரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர், சென்னை மாநகராட்சி மன்ற தேர்தலில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து அவரை காவல் துறையின் முன் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளார். ஆனால் குற்றத்தை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றம் செய்தவர்களை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பல்வேறு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சரே நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது முதலமைச்சர் பெயருக்கு அழகல்ல என்றும் தெரிவித்தார்.


தவறு செய்தவர்களை சட்டரீதியாக தண்டிக்க உத்தரவிடாமல் இதுபோன்று சட்டத்துக்கு புறம்பாக முதலமைச்சர் செயல்படுவது வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தோல்வி பயத்தின் காரணமாக அதிமுக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்றார் அவர். ஆனால் திமுக தான் தோல்வி பயத்தில் இது போன்ற வன்முறைச் சம்பவங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். 


மேலும் படிக்க | சட்டையை கழற்றி கேள்வி கேட்ட அமைச்சர் மீது வழக்குப்பதிவு 


நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நியாயமாக நடைபெற வேண்டும் என்றும் முறையாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பிறகே அடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கைக்கு செல்லவேண்டும் என்றும் அதுதான் நீதிமன்றத்தின் உத்தரவு என்றும் அவர் தெரிவித்தார்.


 தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி வாக்கு எண்ணிக்கையின் போது பெரும்பான்மையாக திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கு தேவையான என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் ஆட்சியாளர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 


இதுபோன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடக்கூடாது என்றும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அதிகாரிகள் நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவேண்டும் என்றும் அவ்வாறு ஆளுங்கட்சிக்கு துணை போகும் அதிகாரிகள் சட்டப்படி பிரச்சினையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். 


மேலும் படிக்க | நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி: ஜெயக்குமார் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR