புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சென்னை சின்ன போரூரில் உள்ள  நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அவர் ராஜீவ்கந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்று வரும் நளினியை விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவிக் கிறது என்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது நளினியை விடுதலை செய்ய வேண்டும் என இரட்டை நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். 


ALSO READ காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளரிடம் ஆயுதத்தைக் காட்டி தப்பியோட்டம்


அதுபோல பல வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்திலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். மாவீரன் பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் நாம்தமிழர் கட்சி சுவரொட்டிகளில் அவரது புகைப்படத்தை தவிர்த்ததற்கு காரணம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள சுற்றறிக்கையின் காரணமாகவே தவிர்க்க பட்டதாகவும், தமிழகத்தில் நடைபெற உள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட இருப்பதாகவும் கூறினார். 


தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப் படுவதும் வாபஸ் வாங்க வருவதும் ஒரு கொடுமையான செயல் எனவும் நீதிமன்றங்களில் நியமிக்கக் கூடிய நீதிபதிகள் பாரதிய ஜனதா கட்சியில் நீடித்து வருவதால் பாஜகவினர் கருத்துக்களையே நீதிமன்றங்களும் வைத்திருப்பதாகவும் இதற்கு இத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார். தனக்கு வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும் எனக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக பட்டியலை வெளியிட்ட நபரை தான் தேடிக் கொண்டிருப்பதாகவும் பட்டியலை வெளியிட்ட அவர் அதற்கான ஆதாரங்களை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.


ALSO READ கழிவறையில் பெண் சிசு கொலை விவகாரம்: குழந்தையின் தாய் கைது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR