அண்ணா பல்கலை. குற்ற சம்பவம் குறித்த கேள்வி! எரிச்சல் அடைந்த கனிமொழி!
பாலியல் குற்றவாளி மீது முன்னாடியே நல்ல நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காது - செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராமநாதபுரத்தில் எரிச்சல் அடைந்த கனிமொழி.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு கனிமொழி எரிச்சல்; இந்த சம்பவம் குறித்து திமுக நிர்வாகிகள் தெளிவாக பதில் சொன்ன பிறகும் அப்படியா இப்படியா என்று கேள்வி கேட்கிறீர்களே என்று செய்தியாளர் சந்திப்பில் எரிச்சல் பட்ட கனிமொழி எம்.பி. ராமநாதபுரத்தில் திமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கனிமொழி எம்பி இடம் அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறாரே என்ற கேள்விக்கு, இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே திமுக நிர்வாகிகள் தெளிவாக பதில் சொல்லிவிட்டோம் மீண்டும் மீண்டும் அப்படியா இப்படியா என்ற கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும் என்றார்.
மேலும் படிக்க | அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: துணை முதல்வர், அமைச்சருடன் குற்றவாளி!!
மேலும் அவர் கூறுகையில், குற்றவாளிக்கு சரியான தண்டனை கிடைக்கும், இந்த சம்பவத்தில் இதைவிட சிறப்பாக எப்படி செயல்பட முடியும்? அரசு தன்னுடைய கடமையை சரியாக செய்திருக்கிறது. ஒரு கட்சியில் கோடிக்கணக்கானவர்கள் இருப்பார்கள், அதில் யார் யார் எப்படி என்பதை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள முடியாது என்று கூறினார். பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து கேட்டதற்கு, அது அவர்களுடைய குடும்ப பிரச்சனை, அது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொண்ட சம்பவம் குறித்து கேட்டதற்கு, அவர் திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டுதல் வைத்திருப்பார் என நினைக்கிறேன். அவர் பச்சை நிறத்தில் வேஷ்டி கட்டி இருந்தார், அவர் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அப்படி நடந்து கொண்டிருப்பார் போலிருக்கிறது என்று கூறினார்.
திமுக மீது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!
அதிமுக சார்பில் அண்ணா தொழிற்சங்க மண்டல புதிய நிர்வாகிகள் நியமன கூட்டம் தேனியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார் பேசிய போது, நீதிமன்றமே திமுக அரசின் மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, காவல்துறை, மதுவிலக்கு போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர் என நீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருந்தது. போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறினால் நீதிமன்றமே குழு அமைக்கும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
நெஞ்சை உருகின்ற வகையில் இதயம் சுக்கு நூறாக உடைந்து போகும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. ஆனால் இந்த அரசு எதுவும் நடைபெறாதது போல் கடந்து போவதுதான் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. யார் அந்த சார் என்று தொடர்ந்து கேள்விகள் வந்து கொண்டே இருக்கிறது, ஆனால் அரசிடம் அதற்கு எந்த பதிலும் இல்லை. விசாரணையை தொடங்கவில்லை அதற்குள் ஒருவர் தான் குற்றவாளி என சென்னை கமிஷனர் கூறுகிறார். காவல்துறைக்கு சுதந்திரம் இல்லாததனால் தான் இன்று காவல்துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ