பழனி பாதயாத்திரை செல்வதற்காக 40 நாள் செருப்பு போடாமல் இருப்பார்கள் என்றும், அதை அண்ணாமலை கடைப்பிடித்து வருகிறார் என்றும் தெரிவித்த அமைச்சர் ரகுபதி, திமுகவை அகற்றுவேன் என்று கூறினால், அவர் வாழ்நாள் முழுதும் செருப்பு அணிய முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.