நிதிஷ் ரெட்டியை போட்டுத்தாக்க... உள்ளே வரும் இந்த வீரர் - இந்திய அணிக்கு மேலும் தலைவலி!

India vs Australia: சிம்மசொப்பனமாக திகழும் நிதிஷ் குமார் ரெட்டியை தூக்கவும், அணியின் பேட்டிங்கை பலப்படுத்தவும் ஆஸ்திரேலிய அணி இந்த வீரரை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவர இருக்கிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 1, 2025, 07:01 PM IST
  • நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பாக விளையாடி வருகிறார்.
  • மிட்செல் மார்ஷ் தொடர்ந்து சொதப்பி வருகிறரா்.
  • இதனால் ஆஸ்திரேலிய அணி மாற்றம் இருக்கலாம்.
நிதிஷ் ரெட்டியை போட்டுத்தாக்க... உள்ளே வரும் இந்த வீரர் - இந்திய அணிக்கு மேலும் தலைவலி! title=

India vs Australia Latest News Updates, Sydney Test: இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவும், பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை தக்க வைக்கவும் இந்திய அணி இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும்.

இரண்டு அணிக்கு முக்கியமான போட்டி...

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தவறவிடாத நிலையில், சிட்னி போட்டி டிராவானாலோ, இந்தியா தோல்வியடைந்தாலோ தொடரும் கோப்பையும் கைநழுவிப்போகும். இந்த போட்டியை வென்றால் WTC இறுதிப்போட்டிக்கு இந்தியா நேரடியாக தகுதிபெற்றுவிடாது என்றாலும், இந்தியா இந்த போட்டியை வென்றுவிட்டால் ஒருவேளை ஆஸ்திரேலியா இலங்கையுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணியே WTC பைனலில் மோதும். அப்படி இருக்க இந்த போட்டி இந்திய அணிக்கு மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். குறைந்தபட்சம் இந்த போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்யப்பார்க்கும்.

மேலும் படிக்க | இந்திய அணிக்குள் பெரும் பஞ்சாயத்து... டிரெஸ்ஸிங் ரூம் தகவல்களை வெளியே சொல்வது யார்?

இந்திய அணி பிளேயிங் லெவன் மாற்றங்கள்

இந்திய அணி அடுத்த போட்டியை வெற்றி பெற என்னென்ன மாற்றங்களை செய்யும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கேப்டன்ஸியில் ரோஹித் சர்மா தொடர்வாரா அல்லது கேப்டன்ஸி பும்ராவுக்கோ, வேறு யாருக்காவது போகுமா என்ற பேச்சுக்களும் தற்போது எழுந்துள்ளன.

அடுத்து, வேகப்பந்துவீச்சாளர்கள் பிரிவில் யாருக்கு ஓய்வளிக்கப்பட்டு, யார் உள்ளே வரப் போகிறார் என்பதும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறது. மெல்போர்ன் டெஸ்டை போலவே இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா விளையாடுமா அல்லது ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கூடுதல் வேகப்பந்துவீச்சுடன் இந்திய அணி களமிறங்குமா என்ற கேள்வியும் இருக்கிறது.

மிட்செல் மார்ஷ் நீக்கம்?

இந்தியாவின் பிளேயிங் லெவன் ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவனின் சில மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி நன்றாக செட் ஆகிவிட்ட நிலையிலும் ஒரே ஒரு பிரச்சனை மட்டுமே அவர்களுக்கு இருக்கிறது எனலாம். அது வேறு ஒன்றும் இல்லை, வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நீக்கப்ட்டு அந்த இடத்தில் வேறு வீரருக்கு வாய்ப்பளிப்பது நல்லது. மிட்செல் மார்ஷிற்கு பதில் பியூ வெப்ஸ்டரை ஆஸ்திரேலிய அணி பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவரும் என கூறப்படுகிறது.

கடந்த நான்கு போட்டிகளில், அதாவது 7 இன்னிங்ஸ்களில் அவர் 73 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் 6 இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே அவர் எடுத்திருக்கிறார். பெர்த் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் மட்டும் 47 ரன்களை அடித்தார். பந்துவீச்சிலும் அவர் கைக்கொடுக்கவில்லை. 6 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

யார் இந்த பியூ வெப்ஸ்டர்?

கேம்ரூன் கிரீன் இல்லாததனால் தான் மிட்செல் மார்ஷ் அணிக்குள் வந்தார். தற்போது அவருக்கு பேக்அப்பாக இருக்கும் பியூ வெப்ஸ்டர், இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டு அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டிகளில் அதாவது 4 இன்னிங்ஸ்களில் - 145 ரன்களை எடுத்துள்ளார். மறுபுறம் வேகப்பந்துவீச்சிலும் அவர் கைக்கொடுத்திருக்கிறார். 4 இன்னிங்ஸ்களில் 7 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருக்கிறார்.

குறிப்பாக, இந்த 4 இன்னிங்ஸ்களில் நிதிஷ்குமார் ரெட்டியின் விக்கெட்டை 3 முறை வெப்ஸ்டர் கைப்பற்றி உள்ளார். இதனால், மிட்செல் மார்ஷுக்கு பதில் வெப்ஸ்டரை அணிக்குள் கொண்டுவருவதால் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரே கல்லில் மூன்று மாங்காய் கிடைக்கும். மிடில் ஆர்டரில் நிலையான பார்ட்னர்ஷிப் கிடைக்கும், நிதிஷ்குமாருக்கு நெருக்கடி அளிக்கவும் உதவுவார், இலங்கையில் சுழற்பந்துவீச்சாளர் கூடுதலாக தேவை எனும்போது, வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நல்ல பார்மில் இருப்பதும் மிக முக்கியம் ஆகும்.

மேலும் படிக்க | மீண்டும் அணியில் முகமது ஷமி! ரோஹித் சர்மா நீக்கம்? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News