ஓசூரில் பயங்கரம்: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை, தேர்தல் தோல்வி காரணமா?
முன்விரோதம் காரணமாக இவர் கொல்லப்பட்டாரா? இது தேர்தல் தோல்விக்கு எதிர்வினையா? என்கிற கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
ஓசூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது இது தேர்தல் தோல்விக்கான எதிர்வினையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். திமுகவின் இளைஞரணி கிளை அமைப்பாளராக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஒசூரின் பிரபல ரவுடியான கஜாவின் நண்பரான இவர் மீது 2020 ஆம் ஆண்டு உறவினரான நாகராஜ் என்பவரை கத்தியால் குத்தியதாக போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுகவை தவிர்த்து சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வெற்றி பெற செய்ததில் இரண்டு கட்சிகளும் இவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் உதயகுமாருக்கு போன் அழைப்பு வந்ததாகவும், குடிபோதையில் இருந்த இவர் பேசிக்கொண்டே அந்திவாடி அருகே நடந்து சென்றபோது, அங்கு மறைந்திருந்தவர்கள் திடீரென உதயகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விருத்தகிரீஸ்வரர் கோயில்: மகாசிவராத்திரியில் கலசங்கள் திருட்டு, பக்தர்கள் அதிர்ச்சி
தகவலறிந்து வந்த மத்திகிரி போலிசார், உதயகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இவர் கொல்லப்பட்டாரா? இது தேர்தல் தோல்விக்கு எதிர்வினையா? என்கிற கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
மேலும் படிக்க | மதுபோதையில் தகராறு.. தட்டிக்கேட்ட பெண் மற்றும் பிள்ளைகள் மீது கத்திக்குத்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR