ஓசூர் அருகே காட்டுயானை தாக்கி பெண் பலி: 10 லட்சம் இழப்பீடு கேட்டு வாக்குவாதம்

ஓசூர் அருகே சாப்ரானப்பள்ளி கிராமத்தில் ஒற்றை காட்டுயானை தாக்கி சங்கரம்மா (35) என்ற பெண் பலியானார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2022, 04:42 PM IST
ஓசூர் அருகே காட்டுயானை தாக்கி பெண் பலி: 10 லட்சம் இழப்பீடு கேட்டு வாக்குவாதம் title=

ஓசூர் அருகே சாப்ரானப்பள்ளி கிராமத்தில் ஒற்றை காட்டுயானை தாக்கி சங்கரம்மா (35) என்ற பெண் பலியானார். இதையடுத்து அவரது உறவினர்கள், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டும், ஒற்றை காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தெரிவித்தும், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சாப்ராணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி சங்கரம்மா (35) இவர் கட்டிட கூலி வேலை செய்து வந்துள்ளார். கணவர் சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், சங்கரம்மா தனது ஒரே மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை சங்கரம்மா கட்டிடப்பணிக்கு செல்ல கிராமத்தை ஒட்டியுள்ள ஒற்றையடி பாதையில் நடந்து சென்றுள்ளார்.

ALSO READ | சரக்கு பாட்டிலில் கலப்படம் செய்த ஆசாமிகள் கைது..!

அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டுயானை சங்கரம்மாவை துரத்தி சென்று மிதித்து தாக்கியுள்ளது. இதில் சங்கரம்மா பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அப்பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து தகவல் அறிந்த தேன்கனிகோட்டை வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சங்கரம்மாவின் உறவினர்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நாட்களாக தொந்தரவு செய்து வரும் ஒற்றை காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தொடர்ந்து காட்டுயானையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள் அதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என அம் வாக்குவாதம் செய்தனர். மேலும் உயிரிழந்த சங்கரம்மா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் தமிழகஅரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம் மீதமுள்ள பணத்தை அடுத்த கட்டமாக வழங்குகிறோம் என சமாதானம் பேசினர்.

மேலும் ஒற்றை காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கைகள் எடுப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த சங்கரம்மாவின் உடல் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ALSO READ | திரைப்பட பாணியில் புல்லட் திருட்டு; டெஸ்ட் டிரைவ் செய்த காதல் ஜோடிகள் மாயம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News