இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு அக்டோபர் 28,29,30 ஆகிய மூன்று தினங்களில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறும். அப்படி இந்த ஆண்டு தேவரின் 115ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்துவருகிறது.  கடந்த 28ஆம் தேதி ஜெயந்தி விழா தொடங்கிய சூழலில் இன்று குருபூஜை நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் உடனடியாக வீடு திரும்பினார். அதேசமயம், நீண்ட தூர பயணங்களை தவிர்த்துவிடும்படி மருத்துவர்கள் முதலமைச்சருக்கு அறிவுறுத்தினர். எனவே இன்று நடக்கவிருக்கும் குருபூஜையில் முதலமைச்சர் கலந்துகொள்ளமாட்டார் என நேற்று அறிவிக்கப்பட்டது.



முதலமைச்சர் கலந்துகொள்ளாத சூழலில் வேறு யார் கலந்துகொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. அதன்படி, மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் செல்லலாம் என கூறப்பட்டது.


இந்நிலையில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பசும்பொன் சென்று தேவர் குருபூஜையில் கலந்துகொள்வார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


ஸ்டாலின் செல்ல முடியாத சூழலில் உதயநிதி ஸ்டாலின் செல்வதன் மூலம் தென் தமிழகத்தில் குறிப்பாக ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உதயநிதியின் செல்வாக்கை அதிகப்படுத்தலாம். அதுமட்டுமின்றி ஸ்டாலினுக்கு அடுத்ததாக திமுகவின் முகமாக  உதயநிதியை வலுவாக மாற்ற இந்த பசும்பொன் பயணம் அமைவதோடு மட்டுமில்லாமல் அவரது அரசியல் எதிர்காலத்திற்கும் உதவும் என கணக்கு போட்டு அறிவாலயத்தினரும், முதலமைச்சரும் இந்த முடிவை எடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 


மேலும் படிக்க | தேவர் குரு பூஜையில் முதலமைச்சர் ஆப்செண்ட்... காரணம் இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ