Pegasus Project: மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்க கோரும் திமுக எம்.பி திருச்சி சிவா
`பெகாசஸ் திட்டம்` பிரச்சனை குறித்து விவாதிக்க திமுக எம்.பி திருச்சி மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்க கோரிக்கை, மக்களவையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் முன்மொழிந்தார்...
புதுடெல்லி: 'பெகாசஸ் திட்டம்' பிரச்சினை குறித்து விவாதிக்கக் கோரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவை அலுவல்களை ஒத்தி வைக்கும் தீர்மானத்தை முன்வைத்தார். கடந்த வாரம் இதே விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் திங்களன்று மீண்டும் தொடங்கியது.
'பெகாசஸ் திட்டம்' பிரச்சனை குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர்கள் மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் மக்களவையில் திங்கள்கிழமை ஒத்திவைப்பு தீர்மான அறிவிப்பை வழங்கியுள்ளனர்.
மணீஷ் திவாரி தனது அறிவிப்பில், "இந்த வகையான கண்காணிப்பு ஹேக்கிங் என்ற வகையில் வரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இது உளவு பார்க்கிறது. அதோடு, இந்த கண்காணிப்பானது, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் படி 'அங்கீகரிக்கப்படாத குறுக்கீடு' ('unauthorised interception') அல்லது ஹேக்கிங் (hacking) என்று சொல்ல முடியும்." என்று தெரிவித்தார்.
Also Read | கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்
ஸ்பைவேரின் உத்தியோகபூர்வ பயன்பாட்டை மத்திய அரசு "திட்டவட்டமாக மறுக்கவில்லை" என்பதால், இந்த பிரச்சனையை தான் அவையில் எழுப்ப விரும்புவதாக திவாரி தெரிவித்தார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலுவாய் எழுந்தது. காங்கிரஸ், திமுக மற்றும் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நீதித்துறை விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல, பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை தேவை என்று நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் பலரும் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்மொழிந்தார்.
இந்த உளவு மென்பொருள், அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்திருப்பதாக இஸ்ரேலிய ஐபிஓ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அப்படியெனில், வேறு யார் வேவு பார்த்திருக்க முடியும்? என்ற கேள்வியை தனது சமூக ஊடக பக்கத்தில் எழுப்புகிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.
Also Read | Kargil Vijay Diwas: போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்துகிறார்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவசாயிகளின் போராட்டம் மற்றும் பெகாசஸ் திட்ட பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தும் அமளிகளால், மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் தொடர்ந்து பல முறை ஒத்தி போடப்பட்டன.
முன்னதாக இஸ்ரேலிய பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்படும் ஐந்தாயிரம் பேர் கொண்ட பட்டியல் வெளியானதில் இருந்து பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கின்றனர்.
ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், உயர் அதிகாரிகளாக பொறுப்பு வகித்தவர்கள் உட்பட பல பிரபலங்களின் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளன. அதிலும் இந்திய ஊடகவியலாளர்கள் 40 பேர் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ALSO READ | ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்பேரவையில் கலைஞர் படத்திறப்பு விழா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR