நண்பர் கலைஞானி கமல்ஹாசன் விரைவில் முழுநலம் பெற வேண்டு: ஸ்டாலின் விருப்பம்
அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து நேரில் நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்று அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ள நிலையில், அவரை தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளார். அவரிடம் விரைவில் நலம் பெற்று வர வேண்டும் எனவும் கூறியுள்ளார். கமல்ஹாசனை சந்தித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் கருத்து பகிந்துள்ளர். மேலும் அவருடன், திமுக பொருளாளர் துரை முருகன் மற்றும் திராவிட சித்தாந்தம் கொண்ட சுபா வீரபாண்டியனும் இருந்தனர்.
ட்விட்டரில் மு.க. ஸ்டாலின் கூறியது, நண்பர் "கலைஞானி" கமல்ஹாசன் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு நவம்பர் 22 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அதன் காரணமாக வரும் சில தினங்களுக்கு அவர் மருத்து ஓய்வில் இருப்பார் எனவும் அக்கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், "கடந்த 2016-ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக நம்மவர் அவர்களின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அம்முறிவினை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டானியம் கம்பி பொறுத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் தலைவர் அவர்களுக்கு இருந்த தொடர் வேலைபளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின் படி நம்மவர் கமல்ஹாசன் அவர்களுக்கு வரும் 22/11/2019 அன்று அக்கம்பினய அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்விற்குப்பின் நம்மவர் நம்மை சந்திப்பார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
முன்னதாக் சமீபத்தில் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை போற்றும் வகையில் கொண்டாப்பட்ட “கமல்-60” என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசனுக்கு புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 10 நாட்கள் கூட தாங்காது, 4, 5 மாதங்களில் ஆட்சி கவிந்து விடும் என சொல்லாதவர்களே இருந்திருக்க முடியாது. ஆனால் அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று கூறினார். ரஜினிகாந்தின் இந்த அரசியல் பேச்சு நாடு முழுவதும் பிரபலமானது. மேலும் பல அரசியல் தலைவர்களை வெளியே வந்து அறிக்கை கொடுக்கும் அளவுக்கு பேசும் பொருளானது.
அதுமட்டுமில்லாமல் நேற்று கோவாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்பொழுது பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் எனக் கூறினார். நடிகர் ரஜினியின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேலையில், ரஜினி - கமல் இணைவு பற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் நலனுக்காக, மேம்பாட்டிற்காக நானும், ரஜினிகாந்தும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் இணைந்து பயணிப்போம். நாங்கள் இருவரும் இணைவதற்கான அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அந்த அதிசயம் உண்மைதான் என்றார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.