சென்னையில் இன்று மின்சார ரயில்கள் இயங்குமா?
வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
சென்னை : வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது. ஓயாமல் பெய்து வரும் மழையால் மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக மழை வெள்ளத்தினால் மூழ்கிவிட்டன. பல வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மென்மேலும் மோசமடைந்து வருகிறது.
மேலும் தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் தேங்கிய மழை நீரால் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழித்தடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறது. கனமழையினால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் இன்று மின்சார ரயில்கள் இயக்கப்படுமா? என்று பயணிகளிடையே சற்று குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில்,இந்த குழப்பத்தை ரயில்வே நிர்வாகம் தீர்த்து வைத்துள்ளது.அதாவது செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை இரு இடங்களிலும் இன்று எப்போதும் போல வழக்கமாக இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
மேலும் வானியல் ஆய்வறிக்கையின்படி,இன்று மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கனமழை முதல் மிக கனமழை கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும், கனமழையானது தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று சில இடங்களில் பெய்த மழையின் அளவுகள் பின்வருமாறு;
சென்னை(N)-63.8%
சென்னை(M)-42.2%
கோயம்புத்தூர்-46.0%
கன்னியாகுமரி-6.0%
காரைக்கால்-32.0%
நாகப்பட்டனம்-15.0%
பாம்பன்-35.0%
சேலம்-2.0%
வேலூர்-7.0%
கடலூர்-35.0%
புதுச்சேரி-66.0%
பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ,விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாமக்கல், வேலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
சேலம் , திருப்பத்தூர், திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
நாகப்பட்டினம், கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
ALSO READ சென்னையில் கனமழை: 6 சுரங்கப்பாதை மூடல்; முக்கிய அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR