சென்னையில் கனமழை: 6 சுரங்கப்பாதை மூடல்; முக்கிய அப்டேட்

சென்னையில் உள்ள சில முக்கிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 8, 2021, 08:41 AM IST
சென்னையில் கனமழை: 6 சுரங்கப்பாதை மூடல்; முக்கிய அப்டேட் title=

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வருகின்றது. இந்த மழையின் தாக்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு நாள் பெய்த பலத்த மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் (Chennai Rain) தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது. மேலும், மழை நீர் (TN Weather updates) வடியாததால் இரவு முமுவதும் பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ALSO READ | சென்னையில் மேலும் இரு நாட்களுக்கு கன மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில் சென்னையில் தொடந்து மழை பெய்து வரும் காரணமாக வடசென்னை திருவெற்றியூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர்  புளியந்தோப்பு, வியாசர்பாடி,கொடுங்கையூர் திநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது. மேலும் வெள்ளநீர் நிரம்பியதால் பல சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடைப்பட்டது.

அதேபோல் கே.கே.நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அதே சமயம் தேங்கி உள்ள மழைநீரில் மருத்துவக் கழிவுகள் மிதப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் பொறுத்தவரை காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை நீட்டடிக்கப்பட்டு நாள் முழுவதும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை இன்று மட்டும் செயல்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.

இதற்கிடையில் நவம்பர் 1 முதல் மாநிலம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக சில மாவட்டங்களில் மட்டும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல பகுதிகளில் இன்னும் அந்த நீர் வடியாத காரணத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மக்கள் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மழைநீரை அகற்றும் பணியை நடவடிக்கையில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ | சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News