மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை மிகவும் பரபரப்பாக இருந்தாலும் அனைவராலும் கூர்ந்து நோக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பதன் அடிப்படையில் பாஜகவின் மூத்தத் தலைவர் அமித்ஷாவின் வருகை பார்க்கப்படுகிறது. 
தமிழகம் வரும் அமித் ஷா, திருவள்ளூர் மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டபப்ட்ட  நீர்த்தேக்கத்தை பொதுபயன்பாட்டிற்கு அர்பணிப்பார். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
21ஆம் தேதி பிற்பகல் சென்னை விமான நிலையம் வரும் அமிஷா கலைவானர் அரங்கத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  
தற்போது நட்புக் கட்சிகளாக கூட்டணியில் இணைந்திருக்கும் அ.தி.மு.கவுடன் சேர்ந்து சட்டம்றத் தேர்தலை பா.அஜ.க சந்திக்குமா என்ற கேள்விகளுக்கு விடை காண்பதாகவும் அமித்ஷாவின் பயணம் அமையலாம்.
 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் நன்மை எதுவும் ஏற்படவில்லை என்ற நிலையில் ஆளும் கட்சியுடனான நட்பைத் தொடர்வாரா அமித் ஷா என்ற கேள்விகளும் எழுகின்றன.      


பாஜகவுடன் சற்று பிணக்கத்துடன் இருக்கும் தமிழக ஆளும் கட்சி அ.இ.அ.தி.மு.க ஊடலை சீர் செய்து தேர்தலை சந்திக்குமா அல்லது மோதலை முற்றவிட்டு புதியபாதையை தேர்ந்தெடுக்குமா என்பதைப் பற்றி முடிவு செய்யவே அமித் ஷா தமிழகத்திற்கு வருகிறார் என்ற பரப்பப்பு தேர்தல் வருவதற்கு வெகுகாலம் முன்னரே தொடங்கிவிட்டது.
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்று சொல்வதுபோல, தேர்தல் வருவதற்கு சற்று முன்னரே அதற்கான சகல ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டது...



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR