SBI வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 22ஆம் தேதி என்ன சிக்கல் எழும்? ஏன்?

எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு! நவம்பர் 22 அன்று வாடிக்கையாளர் சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம் - இதனால்தான் நவம்பர் 22 அன்று எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்கள் "சற்றுப் பொறுத்துக் கொள்ளவும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 20, 2020, 09:54 PM IST
  • INB / YONO / YONO Lite ஐ அணுகுவதற்கு சிரமம் ஏற்படலாம்
  • நவம்பர் 22 அன்று என்ன நடக்கும்?
  • சிறந்த ஆன்லைன் வங்கி அனுபவத்திற்கு எஸ்பிஐ தயாராகிறது
SBI வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 22ஆம் தேதி என்ன சிக்கல் எழும்? ஏன்? title=

புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்கும் வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) (State Bank of India (SBI)) சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. தனது பரந்துபட்ட  வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் தகவல்களைக் கொடுப்பதிலும் SBI முன்னணியில் இருக்கிறது.  

நவம்பர் 22 அன்று INB / YONO / YONO Lite ஐ அணுகும்போது வங்கியின் வாடிக்கையாளர்கள் சில அசெளகரியங்களை சந்திக்க நேரிடும் என்று SBI  தனது அண்மைப் பதிவில் அறிவித்துள்ளது. 

எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு! நவம்பர் 22 அன்று வாடிக்கையாளர் சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம். எனவே வாடிக்கையாளர்கள் "சற்றுப் பொறுத்துக் கொள்ளவும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

வங்கி, அன்று தனது இணைய வங்கி தளத்தை மேம்படுத்தும். "ஒரு சிறந்த ஆன்லைன் வங்கி அனுபவத்தை வழங்குவதற்காக எங்கள் இணைய வங்கி தளத்தை மேம்படுத்தும் நவம்பர் 22ஆம் தேதியன்று, எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்" என்று எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.

எஸ்பிஐ இணைய வங்கி வசதிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 81 மில்லியன் என்ற அளவில் உள்ளது. மொபைல் வங்கி சேவைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 18 மில்லியனுக்கும் சற்று அதிகம் என்பதால், எஸ்பிஐ தனது இணைய தளத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துகிறது.  

YONO செயலி என்பது எஸ்பிஐ ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும். 66 மில்லியன் பதிவிறக்கங்களை கொண்டுள்ள YONO செயலி 28.5 மில்லியன் பதிவுசெய்த பயனர்களைக் கொண்டுள்ளது. எஸ்பிஐயின் தரவுகளின் படி, ஒரு நாளைக்கு 7.5 முதல் 8 மில்லியன் பேர் YONO செயலிக்குள் உள்நுழைகின்றனர்..

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News