Kanimozhi Karunanidhi Campaign: நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி வாக்கு சேகரித்தார். அப்பொழுது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான மோடி அரசை கடுமையாக விமர்சித்தார். பாசிச சக்திகளுக்கு எதிரான விடுதலை போராக வரும் மக்களவைத் தேர்தலில், நம் இந்தியா கூட்டணி வெல்லட்டும்.. ஆதிக்கவாதிகளின் ஆட்சி வீழ்ந்து, ஜனநாயகம் மலரட்டும் எனக்கூறி, மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என மக்களிடம் கனிமொழி கருணாநிதி பரப்புரை செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி தேர்தல் பரப்புரை அம்சம்..


- பஜாக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு ஓர வஞ்சனை செய்து வருகிறது. 


- பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை மதிப்பதும் கிடையாது.


- தமிழகத்தில் மட்டும் தான் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. 


- பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்டால் எங்களை நக்சல் எனக் கூறுகின்றனர்.


- பாஜகவில் இணைந்துவிட்டால், அனைவரும் குற்றமற்றவர்களாக மாறிவிடுவார்கள்.


- ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து கேள்வி கேட்டால் ஈடி, சிபிஐ, ஐடி அமைப்பை ஏவி விடுகின்றனர்.


மேலும் படிக்க - இன்னும் அதிகமாக செய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் - கோவையில் அண்ணாமலை பேச்சு!


 



- எதிர்க்கட்சிகளை மிரட்டி ஆட்சி செய்யலாம் என பாஜக நினைக்கிறது.


- எதிர்க்கட்சி தலைவர்களை கைது சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.


- காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 


- மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் கேட்டால் தர முடியாது என்கிறார்கள். 


- அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கிறார்கள். 


- அம்பானி, அதானிக்காக தான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார். 


- ரூ.65,000 கோடிக்கு மேல் கார்ப்ரேட் நிறுவன கடனை ரத்து செய்துள்ளார்கள். 


- விவசாயிகள் கடனை ரத்து செய்யச் சொன்னால் கேட்க மாட்டார்கள். 


மேலும் படிக்க - பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும் - திருச்சி சிவா!


- பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பல விவசாயிகள் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள்.


- இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து கேட்டால் மத்திய அமைச்சர் அமித்ஷா பக்கோடா போடச் செல்கிறார். 


- அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி கேட்க பிரதமருக்கு தைரியம் உண்டா? 


- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும்.


- இந்த தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்பதை நினைவில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். 


- தமிழ்நாட்டிற்கு நிதி தராத பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.


நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் பேசி வரும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு மக்கள் வாக்களித்து நிச்சயம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி கேட்டுக்கொண்டார்.


மேலும் படிக்க - தேமுதிக வங்கி கணக்குகளை முடக்கி விடுவதாக பாஜக அச்சுறுத்தியது - பிரேமலதா விஜயகாந்த்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ