பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும் - திருச்சி சிவா!

DMK Tiruchi Siva on BJP Government: பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும். பணக்காரர்கள் சீமான்களாக ஆக வேண்டும் என்பது தான் என்று திருச்சி சிவா பேசியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 3, 2024, 12:41 PM IST
  • பாஜக நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும்.
  • பணக்காரர்கள் சீமான்களாக ஆக வேண்டும்.
  • கும்பகோணத்தில் திருச்சி சிவா பேச்சு.
பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும் - திருச்சி சிவா! title=

DMK Tiruchi Siva on BJP Government: பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும். பணக்காரர்கள் சீமான்களாக ஆக வேண்டும் என்பது தான் என்று கும்பகோணத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா பேசியுள்ளார். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சுதாவை ஆதரித்து திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, நாடாளுமன்ற மேலவையில் குடியுரிமைச் சட்டம் திருத்தம் தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த 99 வாக்குகளும், அரசுக்கு ஆதரவாக124 வாக்குகள் பதிவாயின.

மேலும் படிக்க | கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்

அரசுக்கு அதரவாக அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்ததனால் அந்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிறைவேறியது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்ற போது ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய்க்கு விற்றது. இன்று 100 ரூபாய். எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு இருந்தது. தற்போது ஆயிரம் ரூபாய். மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் இந்த விலை உயர்வினால் பாஜக அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்தது. மக்கள் தலையில் பாஜக அரசு சுமையை ஏற்றியது. இந்த சுமையை இறக்கும் வகையில் பேருந்தில் மகளிர்க்கு இலவச பயணம் என திமுக அரசு திட்டம கொண்டு வந்தது. பாஜக அரசின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும். பணக்காரர்கள் சீமான்களாக வேண்டும் என்பதே என்றார்.

ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து  முதலில் திமுக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது. இதனை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர். அதனை தொடர்ந்து அந்தச் சட்டம் நிறுத்தப்பட்டது. என்றும் மக்களுக்கு ஆதரவாக திமுக தொடர்ந்து குரல் எழுப்பும் என திருச்சி சிவா தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக கச்சத்தீவு பற்றி பேசி வருகிறார்கள். முதலில் இந்தியாவில் ஒரு மாநிலமான அருணாச்சல் பிரதேசம் தனக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது.  அந்த மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சீனப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது, காஷ்மீரில் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதைப்பற்றி பேச காணோம் முதலில் நாட்டின் மாநில எல்லையோரம் உள்ள இடங்களின் பிரச்சினைகளை தீர்த்து விட்டு கட்சத் தீவு பிரச்சனைக்கு வரட்டும்,

புயல் வந்ததற்கு பணம் கேட்டோம், வெள்ளம் வந்ததற்கு பணம் கேட்டோம் தரவில்லை. ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா நமக்கு ஒன்றிய அரசு தருகிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு இரண்டு ரூபாய் 75 காசு தருகிறது, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ஒரவஞ்சனை தான் செய்துள்ளது. நீங்கள் நிம்மதியாகவும், நல்லபடியாகவும் இருக்க வேண்டும், நாடும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே நமது நோக்கம். நமக்குத் தேவை ஜனநாயகமா? எதேச்சாதிகாரமா? அது உங்கள் கையில் உள்ளது என திருச்சி சிவா தெரிவித்தார்.

மேலும் படிக்க | மனைவியோடு வாழாத மோடி, மக்களை மட்டும் எப்படி குடும்பமாக நினைப்பார்? முத்தரசன் காட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News