சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றின் அளவில் எழுச்சியைக் கண்டு வருகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், கொரோன (Coronavirus) பரவலைத் தடுக்க அரசு மே 10 முதல் மே 24 வரை ஊரடங்கை விதித்துள்ளது. இது தவிர மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றையும் பொது மக்கள் பின்பற்றாமல் தேவையின்றி வெளியே சாலைகளில் சுற்றிக்கொண்டிருப்பதால், கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தலாமா என அரசு சிந்தித்து வருகிறது. 


இதற்கிடையில், சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், கொரோனா தொற்று பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களும் தேவையின்றி வெளியே செல்வது அவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. வீட்டுத் தனிமையில் இருப்பபவர்கள் கண்டிப்புடன் இல்லாமல், வெளியே வருவதால், மற்றவர்களுக்கு தொற்று பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் பலர் தேவையின்றி வெளியே சுற்றுவதாக பல குற்றச்சாட்டுகளும் வந்தன.


ALSO READ: இ-பாஸ் மற்றும் இ-பதிவுக்கும் என்ன வித்தியாசம்?


இந்த நிலையில், கொரோனா தொற்று பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி (Chennai Corporation) தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்கள் கொரோனா மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் வெளியே நடமாடுவது தெரிய வந்தால், 044-2538 4520 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஊரடங்கு (Lockdown) காலத்தில் தேவை இல்லாமல் வெளியே வருபவர்களுக்கும், முகக்கவசம் அணிதல், தன் மனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கும் ஏற்கனவே பல வித அபராதங்கள் விதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. சென்னையில்தான் தமிழகத்திலேயே மிக அதிக தொற்று எண்ணிக்கை இருந்து வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளியே நடமாடுபவர்கள் பற்றி தெரியவந்தால் 044-2538 4520 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


ALSO READ: E-Pass: தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு அமல், விண்ணபிப்பது எப்படி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR