காயத்தில் வலியில் துடிதுடித்த சிறுத்தை மீட்கப்பட்டது! முதுமலையில் சிகிச்சை
Leopard Rescue: தனியார் காபி தோட்டத்தில் சுருக்க கம்பியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்
கோவை: தனியார் காபி தோட்டத்தில் சுருக்க கம்பியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள சேரம்பாடி அத்திச்சொல் பகுதியில் மேத்யூ என்பவரின் காபி தோட்டத்தில் வைத்திருந்த சுருக்கு கம்பியில் சிறுத்தை ஒன்று மாட்டிக் கொண்டிருப்பதாக நேற்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்த உடனே, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பார்த்தபோது சுருக்கு கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தை ஆக்ரோஷம் மிகுந்து காணப்பட்டது .
ஆக்ரோஷத்துடன் இருந்த சிறுத்தையை பார்த்த உடனே வனத்துறையினர் உடனடியாக மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ குழு வரும் வரையில், வனத் துறையினர் சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ
பிறகு மருத்துவ குழுவினர் வந்தவுடன், அவர்களுடன் வனத்துறையினர் சிறுத்தையின் அருகே சென்று பார்த்தபோது, சிறுத்தையினுடைய உடல் சுருக்கு கம்பியால் மாட்டிருப்பது தெரியவந்தது. கம்பியில் மாட்டியதால் காயமடைந்து, வலியுடன் சீற்றத்துடன் இருந்த சிறுத்தையை மீட்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது.
மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்
நீண்ட நேரம் போராடிய வனத்துறையினர், மருத்துவக் குழுவினர் உதவியுடன் சிறுத்தையை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்பொழுது சிறுத்தை உடைய உடல்நிலை நன்றாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தனியார் காப்பி தோட்ட உரிமையாளர்கள் ஒருவர் தலைமறைவான நிலையில் மற்றொரு நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு
மேலும் படிக்க | காட்டுக்கே ராணின்னாலும், குட்டிக்கு நான் தான் அம்மா! சிங்கத் தாயின் பாசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ