மதுரை மத்திய தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன்  உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவர் தேமுதிமுகவின் பொருளாராக பதவி வகித்தவர். கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்கு சென்றவர். பின்னர் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். விஜயகாந்த் அரசியல் பிரவேசம் மேற்கொண்டபோது கூடவே இவருக்கும் முக்கியப் பொறுப்புகொடுத்து, மதுரை மத்திய தொகுதியிலும் வேட்பாளராக நிறுத்தினார்.


 


READ | முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பி.வளர்மதிக்கு கொரோனா தொற்று...!!


கட்சியின் பொருளாளராகவும் இருந்த அவர் சில ஆண்டுகளில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. ஆக மாறி அக்கட்சியில் இணைந்தார். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க, சீட் கிடைக்கவில்லை.வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார். 


 


READ | மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ. வுக்கு கொரோனா பாதிப்பு...தற்போதைய நிலை என்ன?


இந்நிலையில், மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான சுந்தர்ராஜனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் சுந்தர்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.