பெண்களுக்கு பேய் ஓட்டும் வினோத திருவிழா.!
மலைவாழ் மக்கள் கொண்டாடும் வினோத திருவிழா - வித்தியாசமான சடங்குகள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வழிபடக்கூடிய மத்தாள காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மந்தாள காளியம்மன் கோவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளது. இதனால் பெரும்பாலும் இந்த கோவிலில் மலைவாழ் மக்களே அதிகம் வழபாடு செய்வர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு நடத்தி பேய் ஓட்டும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது, கெங்கவல்லி, அயோத்தியாபட்டணம், பச்சைமலை, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மலைவாழ் மக்கள் ஒன்றுகூடி வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில் ஒரு சடங்கு உள்ளது ; பேய் ஓட்டும் சடங்கு.!
மேலும் படிக்க | திருவிழாவில் நீதிமன்றம்: ஆங்கிலேயர் காலத்திலிருந்து தொடரும் ஐதீகம்
அதாவது, சாமி கும்பிட வரும் பெண்கள் அனைவருக்கும் எல்லாம் பேய் ஓட்டமாட்டார்கள். முதலில் திருமணம் ஆகாத பெண்கள் வெள்ளை சேலை கட்டி தரையில் கவிழ்ந்து படுத்துக் கொள்ள வேண்டும். சேர்வை மாடு என்று அழைக்கப்படக் கூடிய சாமி மாட்டைக் கோவிலைச் சுற்றி ஓட விடுவார்கள். தரையில் வெள்ளைச் சேலையுடன் படுத்துக் கொண்டிருக்கும் பெண்களை அந்த சாமி மாடு வரிசையாகத் தாண்டும். எந்தப் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறதோ, அந்தப் பெண்ணை மட்டும் சாமி மாடு தாண்டாது. அந்தப் பெண்ணின் மீதே ஏறி இறங்கும்.
சாமி மாடு ஏறும் பெண் மீது பேய் பிடித்திருக்கிறது என்பது அம்மக்களின் நம்பிக்கையாகும். உடனடியாக அந்தப் பெண்ணுக்கு பேய் ஓட்டும் நிகழ்வு நடைபெறும். அதாவது, பெண்களுக்குப் பேய் பிடித்து இருந்தால் மாடு அந்த பெண்களை மிதித்து தாண்டும். பேய் பிடிக்கவில்லை என்றால் மாடு அந்த பெண்ணைத் தாண்டி விடும். ஊருக்கு வெளியே அமைந்துள்ள மந்தாள காளியம்மன் கோவிலின் இந்த திருவிழா தற்போது விமர்சையாக நடைபெற்றது.
மேலும் படிக்க | ‘கூத்தாண்டவர் கோவில் திருவிழா’ - சிறப்பாக நடத்திமுடிக்க ஆலோசனை
கொரோனா தளர்வுக்குப் பிறகு நடைபெறுவதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட பெண்களை சாமி மாடு மிதித்தது. பேய் பிடித்ததாக நம்பப்படும் அந்தப் பெண்களின் தலைமுடியை இழுத்து, சாட்டையால் அடித்து அருகில் உள்ள மரத்தில் தலைமுடியைப் பிய்த்து பூசாரிகள் ஆனி அடித்தனர். இதன்பிறகு அந்தப் பெண்ணுக்கு பேய் போய்விட்டதாக மலைவாழ் மக்கள் நம்புகின்றனர். பேய் ஓட்டும் வினோத காட்சிகளைக் கண்டு இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் பரவசமடைந்தனர்.
மேலும் பேய் ஓட்டுவது மட்டுமல்லாமல் குழந்தைப்பேறு இல்லாத பெண்களும் அதிகளவில் கலந்துகொள்ளும் திருவிழாவாக இந்த கோவில் அமைந்து வருகிறது. இதனால், சுற்றுப்பகுதியில் உள்ள மலை கிராம மக்களின் குலதெய்வமாக மந்தாள காளியம்மன் இருந்து வருகிறாள். கிட்டத்தட்ட, சேலம் மலைவாழ் பகுதிகளான பச்சமலை, தும்பல்பட்டி பைத்தூர், மேல் தொம்பை, கீழ் தும்பை, கீரிப்பட்டி, அயோத்தியபட்டணம், பருத்திக்காடு, சுக்கம்பட்டி, மஞ்சவாடி கணவாய், மந்தக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களின் நம்பிக்கையும், குல தெய்வமுமாக விளங்குகிறாள் இந்த மத்தாள காளியம்மன்.!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR