விண்ணை முட்டும் உச்சத்தில் தங்க விலை... ஒரு சவரன் ரூ.37,000-யை தாண்டியது..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.37,080-க்கு விற்பனை..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.37,080-க்கு விற்பனை..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 உயர்ந்து 37,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து 4,635-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து 53,30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டதால் தங்க விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு பவுன் ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னையில் இன்று (ஜூன் 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,635 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,610 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது.
READ | 13,000 ரூபாயில் தொடங்கப்பட்ட ‘பதாஞ்சலி’ முன்னணி நிறுவனங்களில் ஒன்றானது எப்படி?
அதேபோல, நேற்று 36,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 200 ரூபாய் உயர்ந்து 37,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.4,841லிருந்து இன்று ரூ.4,866 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 38,728 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 200 ரூபாய் உயர்ந்து 38,928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,664 ஆகவும், டெல்லியில் ரூ.4,691 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,751 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,621 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,550 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,615 ஆகவும், ஒசூரில் ரூ.4,612 ஆகவும், கேரளாவில் ரூ.4,469 ஆகவும் நிர்ணயிக்கபட்டுள்ளது.