சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பன்னாட்டு விமானங்கள் மூலம் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பன்னாட்டு விமானங்கள் மூலம் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கிடைக்கும் ரகசிய தகவல் அடிப்படையில், சோதனை நடத்துகையில் பலர் பிடிபடுகின்றனர்.
அந்த வகையில், உளவுத் தகவல் அடிப்படையில், எதிகாட் ஏர்வேஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமான பயணியிடம் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவரது உடமைகளை பரிசோதித்ததில், 4 தங்க வயர்கள், பைகளின் உலோக சட்டத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 2.06 கிலோ தங்கம், சுங்கச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.90.17 லட்சம். இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ALSO READ | சென்னையில் கனமழை: பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மக்கள் அவதி..!!
முன்னதாக, இரு வார காலத்திற்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில், சாா்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளிடம் உடமை ஏதும் இல்லாததால், சந்தேகப்பட்டு சோதனையிட்ட போது அவர்களது உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த, ரூ.1 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 270 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
Also Read | விஜய்சேதுபதியை தாக்கிய காரணம்! உண்மையை உடைத்த காந்தி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR