சென்னை: சென்னை அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கும் COVID-19 பரிசோதனை செய்ததில் அனைத்து முடிவுகளும் நெகடிவாக வந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை விலங்கியல் பூங்காவின் துணை இயக்குநர் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் 15 ஆசிய சிங்கங்கள் இருந்தன, அவற்றில் பத்து சிங்களுக்கு COVID-19 பாஸிடிவ் என்று தெரியவந்தது. கொரோனாவுக்கு ஆண் சிங்கம் ஒன்றும் பெண் சிங்கம் ஒன்றும் பலியாகின.  


வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் (Arignar Anna Zoological Park(AAZP), பராமரிக்கப்படும் சிங்கங்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான நிறுவனம் (National Institute of High Security Animal Diseases (NIHSAD) க்குக் அனுப்பப்பட்டிருந்தது.


இதற்கு முன்னதாக COVID-19 தொற்று இருந்த 8 சிங்கங்களின் நாசி மற்றும் மலக்குடல் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதன் முடிவுகள் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, எந்த சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இல்லை. இது தொடர்பாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 


Also Read | COVID-19 Death: அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு 2வது சிங்கம் பலி


"இதன் மூலம், AAZP இல் உள்ள அனைத்து 13 சிங்கங்களுக்கும் தற்போது SARS-COV2 நெகடிவ் என்று முடிவுகள் வந்துள்ளன. பூங்காவில் இருந்து இரண்டு தொகுதிகளாக அனுப்பப்பட்ட மாதிரிகளை பரிசோதித்த NIHSAD, ஜூலை 23 அன்று இந்த முடிவுகளை கொடுத்தது". எனவே, தற்போது மிருகக்காட்சிசாலையில் கொரோனா பாதிக்கப்பட்ட சிங்கம் ஏதும் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


அதிகாரிகளின் கூற்றுப்படி, அனைத்து சிங்கங்களும் நன்றாக குணமடைந்து வருகின்றன, மேலும் அவற்றுக்கு கோவிட் நோய்க்கு பிந்தைய தீவிரமான அறிகுறிகளையோ சிக்கல்களையோ காட்டவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் சிங்கங்களின் சுகாதார நிலையை கூர்மையாக கண்காணித்து வருகின்றனர்.


இந்த மிருகக்காட்சி சாலையில் இருந்து அனுப்பப்பட்ட நான்கு சிங்கங்களின் மாதிரிகளில் COVID-19 இன் ‘டெல்டா வகை கொரோனா வைரஸ் ’ இருப்பதாக ஜீ மீடியா முன்பு செய்தி வெளியிட்டிருந்தது. இது NIHSAD போபால் பகிர்ந்துள்ள மரபணு வரிசைமுறை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது.


Also Read | COVID-19 vs Elephants: முதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை


உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இந்த மாறுபாடு ஆன்டிபாடிகளால் (antibodies) அதிக பரவுதலையும், குறைக்கப்பட்ட நடுநிலைப்படுத்தலையும் காட்டியது. இந்த மாறுபாடு முதன்முதலில் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. SARS-CoV-2 (தொற்று) இன் மாறுபாடுகள் COVID-19 தொற்றுநோய் முழுவதும் உலகம் முழுவதும் உருவாகி வருகின்றன.


53 வெவ்வேறு விலங்குகளின் வெப்பநிலை சோதனைகள், உணவு முறைகள் மற்றும் உணவுத் தகவல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. 
பாதுகாப்பாக பராமரிக்கப்படும் சிங்கங்களுக்கு கொடிய வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்ற பற்றிய மர்மம் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, மிருகக்காட்சிசாலைக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்களின் கருத்துப்படி, மனிதர்களில் இருந்து சிங்கங்களுக்கும், பாதிக்கப்பட்ட சிங்கத்தில் இருந்து பிற சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.


நிபுணர்களுக்கிடையேயான கலந்தாலோசனைகளின் அடிப்படையில், விலங்கு பராமரிப்பாளர்கள் மற்றும் தீவனங்கள் இடுபவர்கள் பிபிஇ கிட் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி வந்த போதிலும், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு எப்படி கொரோனா பரவியது என்ற கேள்விகளும் எழுகின்றன.  தமிழ்நாடு விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)) மற்றும் ஹைதராபாத் மிருகக்காட்சிசாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையின் (Bronx Zoo) நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நெறிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.


Also Read | Elephant family: 500 கி.மீ வீதியுலா வரும் சீனாவின் யானை மந்தைகள் Viral


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR