பயணிகளுக்கு குட் நியூஸ்... தமிழகத்தின் இந்த மூன்று வழித்தடங்களில் நியூகோ EV பேருந்துகள்
NeuGo EV Buses: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தனியார் மின்சார பேருந்தான நியூகோ, தற்போது தமிழ்நாட்டின் மூன்று முக்கிய வழித்தடங்களில் புதிதாக இயக்கப்பட உள்ளது.
NeuGo EV Bus New Routes In Tamil Nadu: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத போக்குவரத்தில் கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு வழித்தடங்களில் 'நியூகோ' (NeuGo) என்னும் பெயரில் மின்சார பஸ்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் மேலும் பல்வேறு புதிய வழித்தடங்களில் இந்த மின்சார பஸ்களை இயக்க இருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பிரீமியம் மின்சார பஸ்களில் க்ரீன்செல் மொபிலிட்டி நிறுவனத்தின் நியூகோ முன்னணியில் திகழ்கிறது. தற்போது இந்த பஸ்கள் இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. எந்திர மற்றும் மின் ஆய்வுகள் உட்பட 25 கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு இவை உட்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த பேருந்துகள் 250 கிலோ மீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டவையாக உள்ளன. இதில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு நகரங்களில் இதற்கு சொந்தமாக பயணிகள் ஓய்வறைகள் மற்றும் லக்கேஜ் பாதுகாப்பு வசதி என பல்வேறு வசதிகள் உள்ளன.
மேலும் படிக்க | ரயில் பெர்த் விதிகளில் புதிய மாற்றம் : இந்த பயணிகளுக்கு லோயர் பெர்த் கன்பார்ம்
தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பளிக்காத இந்த மின்சார பேருந்துகள் புதிதாக பாண்டிச்சேரி – திருச்சி, சென்னை – திருச்சி மற்றும் கோயம்புத்தூர் – திருச்சி ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் வசதியான பயணங்களை விரும்பும் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு அவற்றை பூர்த்தி செய்யும் விதமாக, நியூகோ இப்போது இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் பல வழித்தடங்களில் சிறப்பாக இயக்கப்பட்டு வருவதாக கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான தேவேந்திர சாவ்லா, பாண்டிச்சேரி, சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களை திருச்சியுடன் இணைக்கும் இந்த புதிய வழித்தடங்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலை
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மேலும் புதிய வழித்தடங்கள் எங்களின் நியூகோ மின்சார பஸ்கள் இயக்கப்படுவது என்பது எங்களின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளதாகவும் தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான போக்குவரத்து தீர்வுகளுக்கான எங்கள் உறுதிப்பாட்டையும் இதை பிரதிபலிப்பதாக கூறினார்.
மேலும் நிறுவனத்தின் செயல்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலம், பயணிகளுக்கு வசதியான பயணத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், பசுமையான பயணத்தில் தென்னிந்தியாவின் கலாச்சார மற்றும் இயற்கை பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நியூகோ, இந்தியா முழுவதும் தனது நெட்வொர்க்கை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. அதன் அனைத்து மின்சார பஸ்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரங்களுக்கு இடையிலான பயணத்தை வழங்குவதாக அமைகிறது. இவை வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
முக்கிய வசதிகள்
பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்திற்கான விருப்பமான ஆப்ஷனாக பயணிகளுக்கு விரும்பப்படும் பஸ்களாக நியூகோ பஸ்கள் முன்னணியில் உள்ளன சிசிடிவி கண்காணிப்பு, ஓட்டுநர் மூச்சுப் பகுப்பாய்வு கருவிகள், ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் வேக வரம்பு கட்டுப்பாடுகள் என பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் உள்ளன.
இந்த பஸ்கள் 25 நுணுக்கமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு எந்திர மற்றும் மின் ஆய்வுகள் இரண்டையும் உள்ளடக்கியது என கூறப்படுகிறது. குறிப்பாக பாதுகாப்பான பயணத்தை விரும்பும் பெண் பயணிகளுக்கு மிகுந்த பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கிறது. இந்த புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், நியூகோ தொடர்ந்து மின்சார பஸ் போக்குவரத்தில் முன்னணியில் உள்ளது.
மேலும் படிக்க | அந்தமானை பாருங்கள் அழகு... IRCTC டூர் பேக்கேஜ் கை கொடுக்கும்...!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ