அந்தமானை பாருங்கள் அழகு... IRCTC டூர் பேக்கேஜ் கை கொடுக்கும்...!!

IRCTC Andaman Package: இந்தியாவில் பார்க்க வேண்டிய அற்புதமான இடங்கள் பல உள்ளன. அதில் ஒன்று அந்தமான். அந்தமான் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல மட்டுமல்லாமல், தேனிலவுக்கும் ஏற்ற இடமாகும். 

இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் அந்தமானில், பல அழகான இடங்களைக் காணலாம். குறிப்பாக கடற்கரைகள் மிகவும் புகழ் பெற்றவை. 

1 /8

IRCTC அந்தமான் டூர் பேக்கேஜ்:  கண்கவர் கடற்கரைகளை கொண்ட அந்தமானில் சுமார் 300 அதிகமான  தீவுகள் உள்ளன. பார்ப்பதற்கும் இனிமையாகவும், புதுமையான அனுபவத்தையும் தரும் அந்தமான் தீவுகளுக்கான ஐஆர்சிடிசி வழங்கும் சுற்றுலா பேக்கேஜ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

2 /8

குடும்பத்துடன் சுற்றுலா பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், அந்தமானை விட சிறந்த தேர்வு எதுவும் வேறு எதுவும் இருக்க முடியாது. ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு சிறந்த டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. 6 இரவுகளும் 7 பகல்களும் கொண்ட இந்த பேக்கேஜின் பெயர் ROMANTIC ANDAMAN HOLIDAYS-GOLD.

3 /8

ஐஆர்சிடிசி பேக்கேஜில் நீங்கள் 6 நாட்களுக்கு அந்தமானின் பல்வேறு அழகான தீவுகளை சுற்றி பார்க்கலாம் இந்த பயணத்திற்கான கட்டணம் எவ்வளவு, தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட பிற முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

4 /8

IRCTC அந்தமான் டூர் பேக்கேஜில், ஏசி அறையில் தங்கும் வசதியுடன் ஐஆர்சிடிசி அந்தமான் பேக்கேஜில் நீங்கள் போர்ட் பிளேயருடன் ஹேவ்லாக் மற்றும் நைலையும் பார்க்கலாம். இது தவிர, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும்.

5 /8

அந்தமானில் உள்ள பல இடங்களை சுற்றி பார்ப்பதற்கான இடங்களுக்கான நுழைவுச் சீட்டு, படகு டிக்கெட் மற்றும் வனப் பகுதிச் செல்வதற்கான ஆகியவையும் இந்த பேக்கேஜில் அடங்கும்.

6 /8

IRCTC இன் மற்ற டூர் பேக்கேஜ்களைப் போலவே, இந்த பேக்கேஜையும் எளிதாக பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com இலிருந்தும் நேரடியாக முன்பதிவு செய்யலாம்.

7 /8

பேக்கேஜின் அதிகபட்ச கட்டணம் ரூ.57,230, இது ஒருவருக்கு மட்டுமே. இரண்டு பேர் இந்த பேக்கேஜை ஷேர் செய்து முன்பதிவு செய்ய விரும்பினால், ரூ.33,600  என்ற அளவில் கட்டணம் இருக்கும். அதேபோல், மூன்று பேருக்கான கட்டணம் ரூ.30,515 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

8 /8

அந்தமானுக்கான பேக்கேஜில் ஒரு குழந்தைக்கான கட்டணம் ரூ.19,810 என்ற அளவில் இருந்து ரூ.15,650 என்பதாக இருக்கும். அதேசமயம், 4 பேர் கொண்ட குழுவாக  முன்பதிவு செய்தால், ஒவ்வொரு பயணிக்கும் கட்டணம் ரூ.30,525 ஆக இருக்கும். 6 பேர் கொண்ட குழுவில் பயணிக்கும் போது ஒருவருக்கான கட்டணம் ரூ.28,970.