தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட அரசு அனுமதி வழங்கியுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி (Corona vaccine) போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.முன்கள பணியாளர்களுக்கு பிறகு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி (Covid vaccine) அளிக்கப்படும் என்றும் அதன்பிறகு 50 வயதுக்கு குறைவான மற்றும் மாற்று நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அரசு (TN Govt) அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


ALSO READ | 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை: MKS


இந்நிலையில், தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தனியார் மருத்துவமனைகளில் முன்களப்பணியாளர்கள் மட்டும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். சென்னையில் (Chennai) 34 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னையில் சென்னை காட்டாங்கொளத்தூர் மற்றும் திருச்சியில் உள்ள SRM மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR