அரசு பேருந்துகள் இனி சைவ ஹோட்டல்களில் மட்டுமே நிற்கும்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியீடு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,
- உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும், மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்.
- கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்
மேலும் படிக்க | மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு முடிவு!
- உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை இருக்க வேண்டும்
- பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்.
- உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்
- பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்
- உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.
- மேலும் உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் M.R.P., விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்
- உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்
- உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்
- உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR