சட்டப்பேரவையில் மேகதாது அணை குறித்து தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது பிரச்சனை தமிழ்நாடு - கர்நாடகம் இடையேயான உணர்வுப்பூர்வமான பிரச்சனை எனத் தெரிவித்தார். முதலில் காவிரி ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது - பின் ஆணையம் அமைந்தாலும் தலைவரை நியமிக்காமல் காலம் தாழ்த்தப்பட்டதாக குறிப்பிட்டார். அண்ணா ,கலைஞர், எம்ஜிஆர் ,ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேகதாது விவகாரத்தில் தொடர்ச்சியாக போராடி வருவதாக கூறிய அவர், மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசின் செயலுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம் தெரிவிப்பதாகவும்,மேகதாது அணை திட்டத்துக்கு தொழில்நுட்ப அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட எந்த அனுமதியையும் தரக்கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அடுத்தடுத்து வரும் அணைப் பிரச்சினைகள்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
அதிமுக இந்த தீர்மானத்தை கொண்டு வந்த போதெல்லாம் திமுக ஆதரித்துள்ளதாகவும், திமுக கொண்டு வந்த நேரத்தில் அதிமுகவும் ஆதரித்துள்ளதாகவும் கூறிய அவர், நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம் - நான் உள்பட யாராக இருந்தாலும் இந்த காவிரி பிரச்சினையில், திமுக, அதிமுக என்ன செய்தது என விவாதிப்பதை விட்டுவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நமக்கு இயற்கையாக கிடைக்கும் நீரை உபயோகித்துக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மறித்து அணை கட்டுவேன் என்பது அநியாயம் எனக் குறிப்பிட்ட அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கமாட்டேன் என்று ஒரு மாநிலம் சொன்னால் கூட்டாட்சி எங்கே இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
இதை விட்டுவிட்டால் வருங்கால சமூகம் நம்மை சபிக்கும் என உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அமைச்சர் துரை முருகன், ஒற்றுமையாக இருந்தால்தான் நம் உரிமையை மீட்க முடியும் எனக்கூறி தீர்மானத்தை முன் மொழிந்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், இந்த தீர்மானத்தை முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றித் தந்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், தமிழ்நாட்டு உரிமையில் நாம் ஒன்றுபட்டு நின்று வெற்றி பெறுவோம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு முடிவு!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR