இன்று நடைப்பெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கையின் விவாதத்தில் அறந்தாங்கி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற  உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன் பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேசிய அவர்,


"நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவ மாணவிகளின் வேலை பெறும் திறனை உயர்த்திட 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது."


"இந்தியாவில்  முதல்வர்களில் முதல் முதல்வராக விளங்கும் நமது முதல்வரை போல மருத்துவத்துறையும் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது."


"ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று வகையிலும் அதிகமாகவும் பயன்படுத்தப் பட்டு வருவதை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர் இது மருத்துவத் துறை அடுத்தடுத்து சந்திக்க உள்ள மிகப்பெரிய சவால்களில் ஆண்டிபயோடிக் மருந்துகள் பிரச்சினை ஒன்றாகத் திகழும் என தெரிவித்துள்ளனர்."


"தற்போது குழந்தைகளுக்கு வரும் சாதாரண சளி ஜுரம் மற்றும் வைரஸ் நோய்களுக்கு கூட ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன அதுபோல் சில மருந்து கடைகளில் எந்த மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பலவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகள் கிடைக்கின்றன இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."


"புற்றுநோய் பாதிப்பில் இருந்து பெண்களை காக்கும் முயற்சியாக கற்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை அனைத்துப் பெண்களுக்கும் இலவசமாக செலுத்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."


"தற்கொலை இறப்புகளில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது அதில் ஆண்கள் திருநங்கைகள் அதிகமாக இருப்பது என்பது கவலைக்குரிய விஷயமாகும்."
 
"இப்பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில்  கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் நின்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட முதற்கட்டமாக 40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்பது  பாராட்டுக்குரியது."


மேலும் படிக்க | கலைக்கு மொழி தடையில்லை... எங்கள் படங்களையும் ரசியுங்கள் - அஜய் தேவ்கனுக்கு நடிகை பதிலடி


"இதற்கு இன்னும் கூடுதலாக நிதியை ஒதுக்கி இத்திட்டத்தை விரிவாக்கி தற்கொலைகள் தொடரா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."


"புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள அறந்தாங்கி மருத்துவமனையில் மனநல மருத்துவ மையம் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."


"தமிழகமெங்கும் குழந்தை இல்லாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பலன் பெறும் வகையில் மாவட்ட மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்."


"மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சிடி ஸ்கேன் டிஜிட்டல் எக்ஸ்ரே போன்றவை உள்ளடக்கிய தனி பிரிவு கட்டிடம் ஏற்படுத்த வேண்டும்."


"எம்ஆர்பி முறையில் மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்."


"ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் தற்போது இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் கீழ் அவசரகால சிகிச்சை பிரிவு மருத்துவமனையாக மாற்ற வேண்டும்."


"அறந்தாங்கி நகரில் உள்ள தஞ்சாவூர் சத்திரத்திற்கு சொந்தமான சந்தை நடைபெறும் இடத்தில் பாதி இடத்தில் சந்தை தொடர்ந்து செயல்படவும் மறுபாதி இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் ஒன்றை கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்".


"அறந்தாங்கியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி ஒன்றினை ஏற்படுத்தி தரவேண்டும் அறந்தாங்கி தொகுதியில் கடற்கரை பகுதியில் மீன் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்குகளும் சிறிய படகுகள் நிறுத்தும் வண்ணம் சிறு துறைமுகங்கள் அமைத்துத் தரவேண்டும்" எனவும் பேசினார்.


மேலும் படிக்க | ரூ.70-க்கு பெட்ரோலை விற்கத் தயார், ஆனால்?... மத்திய அரசை சாடிய தெலங்கானா அமைச்சர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR